பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cystopyelitis

355

cytoplasm


அறுவைச் சிகிச்சை மூலம் சீர்படுத்துதல்.

cystopyelitis : சிறுநீர்ப்பை அழற்சி : சிறுநீர்ப்பையும் சிறுநீரக இடுப்புக் குழியும் வீக்க மடைதல்.

cystoscope : சிறுநீர்ப்பை உட்புற ஆய்வுக்கருவி; சிறுநீர்ப்பை நோக்கி; சிறுநீர்ப்பை உட்காட்டி : சிறுநீர்ப்பையின் உட்புறத்தை ஆராய்வதற்கான கருவி.

cystoscopy : சிறுநீர்ப்பை உட்புற ஆய்வு : சிறுநீர்ப்பையின் உட் புறத்தைச் சிறுநீர்ப்பை உட்புற ஆய்வுக்கருவிமூலம் ஆராய்தல்.

cystotomy : சிறுநீர்ப்பை உள் அறுவை; சிறுநீர்ப்பை அகற்றல்; சிறுநீர்ப்பைத் திறப்பு : சிறுநீர்ப் பைக்குள் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

cystourethritis : சிறுநீர் குழாய் அழற்சி : சிறுநீர்ப்பை, மூத்திர ஒழுக்குக் குழாய் ஆகியவற்றில் ஏற்படும் வீக்கம்.

cystourethrography : சிறுநீரக ஊடுகதிர்ப்படம் : கதிரியக்க ஒளி ஊடுருவுப் பொருள் மூலமாகச் சிறுநீர்ப்பையையும், சிறுநீர்க் குழாயையும் ஊடுகதிர்ப் படம் எடுத்தல்.

cytamen : சைட்டாமென் : சையானோகோபாலமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

cytrabine : சைட்டாராபின் : டி.என்.ஏ இணைப்பில் குறுக்கிடும் வளர்சிதை மாற்ற மருந்து. இது கடுமையான வெண்குட்டத்தைக் குணப்படுத்தப் பயன்படுத்தப் படுகிறது.

cytodiagnosis : உயிர் நுண்ம நோய் நாடல் : நுண்ணிய உயிர ணுக்களை ஆராய்ந்து நோய்க் காரணங்களைக் கண்டறிதல்.

cytochrome : 1. திசுப்பாய்மத்திலுள்ள குருதிப் புரதத்தின் ஒரு வகை. இது எலெக்டிரானையும் ஹைடிரஜனையும் எடுத்துச் செல்கிறது. 2. மிட்டோக் கோண்டிரியாவில் காணப்படும் சைட்டோக்குரோமும் தாமிர மும் அடங்கிய ஆக்சிடோஸ் என்னும் செரிமானப்பொருள் தொகுதி.

cytogenetics : உயிர் நுண்ம மரபணுவியல் : இயல்பான மற்றும் இயல்புக்கு மாறான இனக் கீற்றுகள் (குரோமோசோம்) பற்றியும், மனிதரிடமும் அவற்றின், நடத்தை முறை குறித்தும் ஆராய்ந்தறியும் அறிவியல்.

cytology : உயிர் நுண்மவியல்; உயிரணுவியல் : உயிர்மங்களைப் பற்றி ஆராயும் உயிரியல்.

cytolysis : உயிர்மக் கூறுபாடு உயிரணு முறிவு; உயிரணு அழிவு : உயிர் நுண்மங்களின் சீர்கேடு. அழிபாடு, சிதைவு, கரைவு முதலியன.

cytoplasm : சைட்டோபிளாசம்; திசுப்பாய்மம்; திசுஉள்பாய்மம் : உயிரணுவியல், கரு மையத்தின்