பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cytosar

356

cytopaenia


உள்ளடக்கங்கள் நீங்கலாகப் பிற வாழும் பொருள்களின் முக்கிய பகுதியாக அமைந்துள்ள ஒரு சிக்கலான வேதியல் கூட்டுப் பொருள்.

cytosar : சைட்டோசார் : சைட்டாராபின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

cytourethroscope : சிறுநீரக ஆய்வுக்கருவி : பின்பக்கச் சிறு நீர்க் குழாயையும் சிறுநீர்ப்பையையும் ஆராய்வதற்கான ஒரு கருவி.

cytochemistry : உயிரணு வேதியியல் : வேதியியல் கூட்டுப் பொருள்கள் உயிரணுவினுள் பகிர்ந்தளிக்கப்படுவதையும், அவற்றின் செயல் முறைகளையும் ஆராய்ந்தறிதல்.

cytodiagnosis : திசுப்பாய்ம நோய் நாடல் : நீர்மங்களிலுள்ள அல்லது கசிவுகளிலுள்ள உயிர் அணுக்களை ஆராய்வதன் மூலம் நோய்க்குண நிலைமைகளைக் கண்டறிதல்.

cytodifferentiation : திசுப்பாய்ம வேறுபாடு : கருமுனை உயிர் அணுக்களில் வெவ்வேறு வகைக் கட்டமைவுகள் உருவாதல்.

cytolysin : சைட்டோலிசின் : ஒரு துணைப்பொருளுடன் சேர்ந்த ஒர் உயிரணுவை அழிப்பதற்கான ஒரு தற்காப்பு மூலம்.

cytomegalic : திசுப்பாய்ம உயிரணு வீக்கம் : திசுப்பாய்ம உயிரணு வீக்கங்களில் காணப்படும் அணு உள்ளடக்கங்களுடன் எடுப்பாகப் பெருக்கமடைந்த உயிரணுக்கள் தொடர்பான.

cytometaplasia : திசுப்பாய்ம மாற்றம் : உயிரணுவின் வடிவமும் செயல்முறையும் மாற்றமடைதல்.

cytometer : திசுப்பாய்ம மானி : உயிரணுக்களை எண்ணி அள விடுவதற்கான ஒரு கருவி.

cytomorphology : உயிரணு ஆய்வியல் : உயிரணுக்களின் கட்டமைப்பினை ஆய்ந்தறிதல்.

cytopathogenic : உயிரணு நோய்க்குணமாற்றம் : உயிரணுக்களில் நோய்க் குணமாறுதல்களை உண்டாக்குவதறகான திறம்பாடு.

cytopathologist : உயிரணு ஆய்வறிஞர் : நோய்களின் உயிரணுக்களை ஆராய்ந்தறிவதில் துறைபோகிய மருத்துவ வல்லுநர்.

cytopathology :உயிரணு நோய் ஆய்வியல் : நோய்க்குண நிலை மைகளை உயிரணு மாதிரிகளை நுண்ணோக்காடி மூலம் ஆராய்வதன் மூலம் ஆராய்ந்து அறிதல் தொடர்பான் சிறப்பு மருத்துவ ஆய்வுத்துறை.

cytopaenia ; உயிரணுக் குறைவு நோய் : இரத்தத்தில் உயிரணுத் தனிமங்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல்.