பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cytophagy

357

cyturia


cytophagy : உயிரணு அழிப்பு : விழுங்கணுக்கள் மூலம் பிற உயிரணுக்களைச் செலுத்துதலும் அழித்தலும்.

cytoproximal : நரம்பணுப்பகுதி : உயிரணுக்கு அருகிலுள்ள நரம் பணுவின் ஒரு பகுதியை குறித்தல்.

cytosine : சைட்டோசின் : நியூக்ளிக் அமிலங்க்ளில் நியூக்ளி யோசைட்ஸ், சிஹ்டைடின், டாக்சிசிஸ்டைடின் ஆகியனவாக அமைகிற ரிபோஸ் அல்லது டிஆக்சிரைபோசுடன் செறிவாக்கம் செய்யப்பட்ட ஒரு பைரிமைடின் ஆதாரப்பொருள்.

cytoskeleton : உயிரணுக் கட்டமைப்பு : உயிரணுக்களின் வடி வத்தைப் பேணி வருகிற ஒர் உயிரணுவின் உள்முகக் கட்டமைப்பு. இது மூன்று வகை இழைமங்களைக் கொண்டது. நுண்இழைமங்கள், நுண்குழாய் இழைமங்கள், இடைநிலை இழைமங்கள்.

cytosol : சைட்டோசால் : மிட்டோக்கோண்டிரியா, ஊன்ம உள் கூழ்ம வலைச் சவ்வு இல்லாத திசு உள் பாய்மம்.

cytostasis : வெள்ளணு திரட்சி : வீக்கம் ஏற்பட்டுள்ள இடத்தில் இரத்த வெள்ளணுக்கள் திரண்டிருத்தல்.

cytostatic : உயிரணுப் பெருக்கத் தடை : உயிரணுக்கள் வளர்வதை யும், பெருக்கமடைவதையும் தடுத்தல்.

cytotoxin : உயிரணுநச்சுப் பொருள்: உயிரணுக்களின் செயற்பாடு களைத் தடுக்கிற அல்லது உயிரணுக்களின் அழிவை உண்டாக்குகிற அல்லது இரண்டையும் விளைவிக்கிற ஒரு தற்காப்பு மூலம் அல்லது நச்சுப்பொருள்.

cytotropism : உயிரணு நகர்வு : 1. ஒரு துண்டு பொருளை நோக்கி அல்லது அதிலிருந்து விலகிச் செல்கிற உயிரணுக்கள். 2. நோய்க்கிருமிகள், பாக்டீரியா அல்லது மருந்துகள் தங்களின் தாக்கத்தை உடலின் ஒரு சில உயிரணுக்களின் மீது செலுத்துகிற போக்கு.

cytozoic : உயிரணு ஒட்டுயிரி : ஒருசில ஒட்டுண்ணிகளைக் குறிக்கிற உயிரணுக்களினுள் வளர்கிற அல்லது அதனுடன் இணைந்துள்ள உயிரி.

cyturia : சிறுநீர் உயிரணு : சிறுநீரில் உயிரணுக்களின் ஏதேனும் ஒரு வகை அடங்கி இருத்தல்.