பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

daltonism

360

dark reactivation


daltonism : டால்டானியம்.

damp proof : ஈரங்காத்தல்.

danazol : டெனாசால்.

dancing eyes : நடன விழிகள்.

dander : இறகு ஒவ்வாமை; செதில் ஒவ்வாமை.

dandrut: தலைப்பொடுகு; அசறு; பொடுகு : மண்டையில் செதிள் உதிர்தல். இது ஒரு வகைத் தோல் நோய்.

dandy fever : முடக்குக் காய்ச்சல் : கணுத்தோறும் கடும்வலி உண்டு பண்ணும் கொள்ளைக் காய்ச்சல் வகை. இதனை "டெங்கு'க் காய்ச்சல் என்றும் கூறுவர்.

danthron : டாந்த்ரான் : முகத்தை மிருதுவாக்கும் பொருள் கொண்ட ஒருவகை மருந்து. இது பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. இது மாத்திரைகளாகவும், திரவமாகவும் கிடைக்கிறது.

Dantrium : டான்ட்ரியம் : டாண்ட்ரோலீன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

dantrolene : டாண்ட்ரோலீன் : தசைச்சுரிப்புக் கோளாறுகளைக் குணப்படுத்தும் மருந்து. கடுமையான இசிப்பு நோய், இழைமைக் காழ்ப்புக் கோளாடு, தண்டு வடக்காயம் போன்றவற்றுக்குப் பயன்படுகிறது.

Daonil : டயோனில் : கிளைபென் கிளாமைடு என்ற மருந்தின் வணிகப்பெயர். நீரிழிவு நோயாளிகளுக்கு இது கொடுக்கப்படுகிறது.

dapsone : டாப்சோன் : சல்ஃபோனிலிருந்து வழிப் பொருளாக எடுக்கப்படும் மருந்து. இது தொழுநோயைக் குணப்படுத்தக் கொடுக்கப்படுகிறது.

Daranide : டாரானைடு : டைக்ளோர்ஃபினாமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Daraprim : டாராப்ரிம் : பைரி மெத்தமின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

Darier's disease : டாரிடர்நோய் : வெகு அரிதாகக் காணப்படும் ஒரு பரம்பரை நோய். ஃபிரான்ஸ் நாட்டின் தோல் நோய் வல்லுநர் இதனைக் கண்டறிந்ததால், இந்தப் பெயரைப் பெற்றது.

dark : இருள்; இருண்ட.

dark adaptation : இருள் இசைவாக்கம்; இருள் தகவமைப்பு : விழிகள் அதிக ஒளியைக் கண்ணுற்ற பின்பு குறைந்த ஒளியைக் காண்பதற்கு விழித் திரை தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் காலம்.

dark field microscopy : இருள் வெளி நுண்ணோக்கல் : ஸ்பைரோகீட் நுண்ணுயிரிகளைக் கண்டறிய உதவும் பரிசோதனை முறை. கறுப்புப் பின்புலத்தில் இக்கிருமிகள் ஒளிர்வதைக் காண இயலும்.

darkground illumination : இருள் பின்னணி ஒளிர்வு.

dark reactivation : கருமை மீள் செயலாக்கம் : புற ஊதாக்கதிர்