பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Davis gag

362

dead foetus syndrome


தடைசெய்வதாக நம்பப்படுகிறது. இது கடுமையான எலும்பு மச்சைக் குறைபாட்டினையும், இதயத் தசைகளில் நச்சுத்தன்மையையும் உண்டாக்கக் கூடியது.

Davis gag : டேவிஸ் வாயடைப்பு : வாயை விரித்துப் பிடித்துக் கொள்வதற்காக-குறிப்பாக தொண்டையில் இருபுறமும் நிணத்திசுக் கோளங்களை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சையின்போது பிடித்துக் கொள்வதற்காக-பயன்படுத்தும் ஒரு பற்றுக் கருவி.

daxtra : தோல்நோய் வகை.

day care : பகல் நேரக் கவனிப்பு : பகல் நேரத்தில் பெற்றோர்கள் வேலைக்குச் சென்றிருக்கும் போது கைக்குழந்தைகளையும் பள்ளி வயது வராத குழந்தைகளையும் கண்காணிக்கவும், அவர்களின் தேவைகளைக் கவனிக்கவும் உள்ள வசதி.

day care centre : பகல் நேர கவனிப்பு மையம்.

day, dreaming : பகற் கனவு.

dead : இறப்பு; இறந்தவர்.

dead birth : இறந்து பிறத்தல் : கருப்பையிலே குழந்தை செத்துப் பிறத்தல். இதில் சுவாசம் இராது; வேறு உயிரியக்க அறிகுறிகளும் இருப்பதில்லை.

dead-born : இறந்து பிறந்த.

dead-cart : கொள்ளை நோய் பிண வண்டி.

dead space : வெற்றுவெளி.

day blindness : பகல் குருடு : மங்கலான ஒளியில் மட்டுமே பொருள்களை ஒன்றாகப் பார்க்க இயலும் பார்வைக் கோளாறு.

'dead-cloths : பிண ஆடை : பிணக் கோடித்துணி.

dead deal : பிணப் பலகை : பிணம் கிடத்தும் பலகை.

day hospital : பகல் மருத்துவமனை : நோயாளிகள் நாள் தோறும் வந்து செல்வதற்கான ஒரு மையம். இது பொழுதுபோக்கு வசதிகள், தொழில் முறை மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இது உளவியல் துறையில் பெரிதும் பயன்படுகிறது.

D.D.T : டிடிட்டி : டைகுளோரோடைஃபினைல் டிரைகிரோத்தான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தின் சுருக்கப் பெயர். இதனை டைக்கோஃபோன் என்றும் அழைப்பர். இது பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கி அழிக்கிறது. மிகவும் ஆற்றல் வாய்ந்த பூச்சி கொல்லி மருந்து.

dead foetus syndrome : இறந்த கருமுளை நோய் : கருப்பையில் கருமுளை இறந்துபோய் 48