பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

decapsulation

365

deciduous


உடலிலிருந்து தலையைத் துண்டித்து வேறாக எடுத்தல்; தலையை வெட்டுதல், எலும்பின் தண்டிலிருந்து தலைப் பகுதியைத் தனியாக பிரித்தெடுத்தல்.

decapsulation : தோலுறை நீக்கம்; கூடு எடுத்தல் : மென்தோல் பொதியுறையினை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

decarboxylase : டீகார்பாக்சிலேஸ் : அமினோ அமிலங்கள் போன்ற கூட்டுப் பொருள்களிலிருந்து கார்பன் டையாக்சைடு விடுபடுவதற்கு ஊக்குவிக்கிற ஒரு செரிமானப் பொருள்.

decay : சிதைவுறுதல்; மரித்தல்; திசுமரித்தல்; திசு அழுகல்; திசுச் சிதைவு : கரிமப்பொருள் சிதைவுறுதல்; ஒர் அணு கதிரியக்க முறையில் சிதைவுறுதல்.

decerebrate : மூளை இயக்க நிறுத்தம்; முளியம் : மூளை செயற்படுதல் இல்லாதிருத்தல்; ஆழ்ந்த உணர்வற்றநிலை; ஒரு நோயாளியின் நான்கு உறுப்பு வாதத்திற்கு உட்பட்டு நோயாளி உணர்வற்று இருக்கும்நிலை. இது பெருமூளை கடுமையாகச் சேதமடைந்திருப்பதைக் குறிக்கிறது.

decerebrate position : உணர்விழப்புநிலை : மூளைத்தண்டின் அடிப்பகுதியில் அழுத்தம் காரணமாக ஒரு நோயாளி உணர்விழந்துள்ள நிலை. இந் நிலையில் கைகள் வளைந்து இருக்கும், உட்புறம் சுழலும்; உள்ளங்கால் வளைந்து இடுப்பு நீண்டிருக்கும்.

decibel : பதின்பெல் : மின்விசை அல்லது ஒலிவிசை போன்ற இருவிசைகளின் விகிதத்தை அளவிடுவதற்கான ஒர் அலகு. இது, 'பெல்' எனப்படும் ஒலிகள்-மின்னோட்டங்கள் முதலியவற்றின் செறிவினை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான அளவின் பத்தில் ஒருபகுதி.

Decicain : டெசிக்கெய்ன் : அமித்தோக்கெய்ன் ஹைடிரோ குளோரைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

decidua : கருச்சவ்வு; கருப்பை உட்படலம்; கருவுரியம் : குழந்தைப் பேற்றுக்கு பிறகு வெளிப்படும் மெல்லிய கருச்சவ்வு.

decidual space : கருச்சவ்வு இடைவெளி : கருவுற்ற தொடக்க நிலையில் எஞ்சியிருக்கும் கருப்பை உட்குழிவு.

deciduoma : கருப்பைக்கட்டி : கருச்சவ்வுத் திசு அடங்கியுள்ள ஒரு கருப்பைக் கட்டி.

deciduous : பல் விழுதல் : பற்கள் மீண்டும் முளைப்பதற்காகப் பருவத்தில் விழுதல்.