பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

decimal

366

deculitus


decimal : பதின்முறை.

Declimax : டெக்ளினாக்ஸ் : டெப்பிரிசோக்குவின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

decoction : வடிநீர்(கஷாயம்) : தாவரப் பொருள்களை நீருடன் சேர்த்துக் கொதிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு திரவத் தயாரிப்பு.

decolourization : நிற நீக்கம்.

decompensation : சரிநிலைக் காப்புச் செயலின்மை; ஈட்டுத் திறன் இழப்பு; செயலிழப்பு : இதய நோய்களில் சரிநிலைக்காப்பு செயற்படாதிருத்தல்.

decomposed : அழுகிய.

decomposition : ஆக்கச் சிதைவு : 1. சிதைதல், அழுகுதல். 2. ஒரு கூட்டுப் பொருளை அதன் ஆக்கக் கூறுகளாகப் பிரித்தல்.

decompression : அழுத்தம் தளர்த்தல்; அழுத்தக் குறைப்பு; அழுத்த நீக்கம் : காற்றுப்புகாப் பேழை மூலம் நீரடியிலும், பிற இடங்களிலும் உழைப்பவர்களுக்கு நேரும் அழுத்த மிகுதியைத் தடுத்தல்.

decompression sickness : அழுத்தத் தளர்வு நோய் : ஆழ் கடலில் மூழ்கியவர்களுக்கும், மீகாமர்களுக்கும் அழுத்தக் குறைவினால் உண்டாகும் ஒரு வகை நோய்.

deconditioning : உடல் தகுதி இழப்பு : உகந்த அளவு உடற் பயிற்சி செய்யத் தவறுதல் காரணமாக உடல் தகுதியை இழத்தல்.

decongestants : மூக்கடைப்பு நீக்க மருந்து; சளி இளக்கி : மூக் கடைப்புகளைக் குறைக்கும் அல்லது நீக்கும் மருந்து. இதனை வாய்வழியாக உட்கொள்ளலாம்; அல்லது துளிகளாக விடவோ, தெளிக்கவோ செய்யலாம்.

decongestion : மூக்கடைப்பு நீக்கம்; அடைப்பு நீக்கம்; திரட்சி நீக்கம் : முக்கடைப்பினை நீக்குதல்.

decontamination : நச்சு நீக்கம் : தீங்குவிளைவிக்கும் பொருள்களை நீக்குதல்.

decortication : புறப்பகுதி நீக்கம் : ஒர் உறுப்பின் மேலுறையை அல்லது புறப்பகுதியை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குதல்.

decrement : குறைமானம் : 1. பொருளின் அளவு அல்லது வீரியம் குறைதல். 2. திரும்பத் திரும்ப ஏற்படும் துண்டுதலுக்கு நரம்பு மண்டலத்தின் துலங்கல் குறைதல். 3. காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை குறைதல்.

decreptitude : முதுமை தளர்ச்சி.

decultus : கிடை நிலை; கிடைவு.