பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dehiscence

368

delirious


சிதை அல்லது வேதியல் மாற்ம் காரணமாகச் சற்று எளிமையான வடிவத்துக்குத் தரங்குறைதல்.

dehiscence : காயப்பிளப்பு; வெடிப்பு : ஒரு காயத்தைப் பிளத்தல் அல்லது கட்டியை உடைத்தல்.

dehydrocholesterol : டிஹைடிரோகொலஸ்டிரால் : தோலில் காணப்படும் ஒருவகை ஸ்டிரால். இது ஒளிப்பிறக்கம் காரணமாக இயல்பூக்கம் ஏற்பட்டபிறகு "D" வைட்டமினாக உருவாகிறது.

dehydration : நீரிழப்பு; உடல் வரட்சி; உடல் நீர்க்குறை; நீர் வற்றல்; நீரின்மை; வற்றல் : உடலிலிருந்து திரவம் அளவுக்கு மீறி வெளியேறி விடுவதால் உண்டாகும் நிலை. உடலிலிருந்து வெளியேறும் திரவத்தின் அளவுக்குச் சமமான அளவு திரவம் உடலுக்குள் செல்லா திருப்பதால் இந்நிலை உண்டாகிறது. இரத்தப் போக்கு, வயிற்றுப்போக்கு, அளவுக்கு அதிகமான வியர்வை, வாந்தி போன்றவை பொதுவாக இந்தச் சமநிலையைச் சீர்குலைக்கிறது.

dehydrocholic acid : டிஹைடிரோகோலிக் அமிலம் : ஈரலிலிருந்து பித்தநீர் உற்பத்தியாவதைத் தூண்டுகிற ஒரு பித்தநீர்உப்பு.

dehydrocorticosterone : டிஹைடிரோகார்ட்டிகோஸ்ரெடரோன் : அண்ணிரகப் புறணியிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்ட உடலியல் இயல்பூக்க இயற்கை இயக்குநீர்.

Dejans' syndrome : டிஜான்ஸ் நோய் : கன்னத்தில் ஏற்படும் வலி, உணர்விழப்பு, கண்விழிப் பிதுக்கம், இரட்டைப் பார்வைக் கோளாறு. இது கண் குழித் தளத்தில் ஏற்படும் ஒரு நைவுப் புண்ணைக் குறிக்கிறது. ஃபிரெஞ்சு கண்மருத்துவ அறிஞர் எம்.சி. டிஜான்ஸ் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

dejavuphenomenon : வலிப்பு நோய்க்கனவு நிலை : சிலவகைக் காக்காய் வலிப்பு நோயின் போது ஏற்படும் கனவு நிலை. இதில் எல்லா நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்தது போன்று அறிமுகமான நிகழ்வுகள் என்ற உணர்வு ஏற்படும்.

dejection : மனச்சோர்வு : குடற்கழிவு; மலம் மனம் கிளர்ச்சியின்றி சோர்ந்திருக்கும் நிலை.

delay : தாமதம்; சுணக்கம்.

delinquent : பிழையாளி.

delinquent juvenile : இளம் பிழையாளி.

deliquescent : கசிவுறுதல்; நீர்ப்பு : காற்று வெளியில் ஈரத்தை உறிஞ்சிக் கசிவுற்று திரவமாதல்.

delirious : சன்னி சார்ந்த; அறிவு நிரம்பிய : மூளைக்கோளாறினால் ஒருவகை மயக்க வெறி கொண்ட