பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

defirium

369

dementia


delirium : சன்னி; பிதற்றல்; மனத் தடுமாற்றம்; பதைப்பு : வெறிப் பிதற்றலான நிலை. அதிகமான காய்ச்சல், மனநோய் நிலைகளில் இது உண்டாகும்.

delirium tremens : நடுக்க மூளைக் கோளாறு; குடிப்பழக்கம்; பிதற்றம்; நடுக்குச்சன்னி : அளவுக்கு மீறிய குடியினால் ஏற்படுகிற வலிப்பு அல்லத நடுக்கத்தடன் கூடிய வெறிப் பிதற்றலுள்ள மூளைக்கோளாறு.

delivery : பிள்ளைப்பேறு; ஈனுதல்; குழந்தை வெளிப்பாடு; பிறப்பு.

delivery, premature : குறை பிறப்பு.

delta sign : ‘டெல்டா' குறியீடு : சிறுமூளைச் சிரைக் குழிவுப் புழைக் குருதியுறைவில் காணப்படும் ஒரு நிரப்புக் கோளாறு.

Deltacortril : டெல்ட்டாகோர்ட்டிரில் : பிரட்னிசோலோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

deltonism : நிறமயக்கம்; நிறப் பார்வையின்மை; நிறக்குருடு : பச்சையையும் சிவப்பையும் வேறு பிரித்தறிய இயலாத கோளாறு நிலை.

delusion : மருட்சி; தீரிபுணர்வு; எண்ண மயக்கம்; மாறுகோள் : ஒருவரின் பண்பாட்டுக்கும்; பழக்கத்திற்கும், அறிவுத்திறனுக்கும் முரணான ஒரு போலி நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் காரண காரியங்களைக் கூறி மாற்றுவது கடினம். பல்வேறு உளவியல் நோய்களின்போது இந்த அறிகுறி தோன்றக்கூடும் குறிப்பாக, முரண் மூளை நோய், அறிவுப் பிறழ்ச்சி, முதுமைத் தளர்ச்சி போன்ற நிலைகளில் இது ஏற்படும்.

demarcation : (திசு எல்லை) வரையறை; வேற்றுமைக் கோடு; வரையறுத்தல் : நோயுற்ற திசுக்களும் ஆரோக்கியமான திசுக்களும் சந்திக்குமிடத்தில் இரண்டுக்குமிடையில் எல்லை குறித்தல்.

demented : அறிவு குழம்பிய; பைத்தியம் பிடித்த : மூளைத் தளர்ச்சியால் அறிவு குழம்பிய நிலை.

dementia : மூளைக் குறை; மூளைக் கேடு : மனத்தளர்வால் ஏற்படும் பைத்திய நிலை.

demorgraphy : சமுதாய நிலை ஆய்வு; மக்கள் நிலை மதிப்பீடு; மக்களியல் : மக்களை தொகை பற்றிய, குறிப்பாக மக்கள் தொகை, மக்கள் தொகைக்கட்டமைப்பு, மக்கள் தொகையின் இடப்பரவல் ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்தல்.

dementia : அறிவுக் குழப்பம்; முதுமை மறதி : மனத்தளர்ச்சி யினால் உண்டாகும் அறிவு குழம்பிய பைத்தியநிலை.