பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

demethlchlortetracycline

370

dengue


இதனால், நினைவாற்றல் குறையும். தன்னைக் கவனித்துக் கொள்ளும் திறன் குறையும்.

demethlchlortetracycline : டிமெத்தில்குளோர் டெட்ராசைக்கிளின் : டெட்ராசைக்ளின் மருந்து வகைகளில் ஒன்று.

demonstration : செயல்விளக்கம்.

Demser ; டெம்செர் : மெட்டிரோசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

demus cent : நோயாற்றும் மருந்து; எரிச்சல் அடக்கி; உறுத்தல் அடக்கி; இளக்கி : நோயைத் தணிக்கும் மருந்து. இது வழுவழுப்பான திரவம். இது எரிச்சலை நீக்கும்; வீக்கத்தைக் குறைக்கும்.

demyelination : மையலின் நீக்கம் : நரம்பு இழைகளின் மேலுறை யிலிருந்து மையலின் என்னும் வெண்ணிறக் கொழுப்புப் பொருளை அழித்தல்.

demyelinization : நரம்பிழை உறையழிவு : நரம்பிழைகளைச் சுற்றியுள்ள மேலுறைகள் அழிந்து போதல். அணு உள்ளரிக் காழ்ப்பின் போது இது உண்டாகும்.

denaturation : புரத மாற்றம்; இயல் முறி : செயல் முறையை இழப்புக்கு வழிசெய்யும் மிதமான வெப்பம் மூலம் புரதங்களை மாற்றுதல்.

dendrite : இழைமப் பிரிவு : ஒரு நரம்பு உயிரணுவின் உடற்பகுதி யிலிருந்த கிளையாகப் பிரியும் இழைமங்களின் ஒரு பிரிவு.

dendritic ulcer : இழைமப் புண்; கிளையோட புண் : விழி வெண் படலத்தில் வரிவரியாக ஏற்படும் சீழ்ப்புண். இதனால், தேமல் படர்ந்து மரம் போன்ற கிளைப் பிரிவுகள் உண்டாகிறது. ஐடோக் சூரிடின் என்ற மருந்தின் மூலம் இது குணமாக்கப்படுகிறது.

denervation : நரம்புத் துண்டிப்பு; நரம்பு எடுப்பு; நரம்பிழப்பு : நரம்புத் தொடர்பினைத் துண்டிக்கும் முறை. ஒரு நரம்பில் ஏற்படும் அடைப்பினை நீக்குவதற்கு இவ்வாறு செய்யப்படுகிறது.

dengue : மூட்டுவலிக் காய்ச்சல்; 'டெங்கு' காய்ச்சல் : மூட்டுகள் தோறும் கடுமையான நோவு