பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

derealization

375

dermatology


derealization : திரிபுணர்வு; மாயையுணர்வு : மக்கள், நிகழ்ச்சிகள், சூழ்நிலைகள் மாறிவிட்டதாகத் தோன்றும் உணர்வு. இயல்பான மக்களிடமும் கனவுகளின்போது இந்த உணர்வு ஏற்படலாம். சிலசமயம், முரண் மூளை நோய், மனச்சோர்வு நிலைகளிலும் இந்த உணர்வு உண்டாகக்கூடும்.

dereistic : தற்காதல் நோய் : இயல்பு நிலைக்குப் பொருந்தாத சிந்தனை. இதனை தற்காதல் நோய் என்றும் கூறுவர்.

derivative : வருவிப்புப் பொருள்; வருவித்த; பெறப்பட்ட : 1. மூலப் பொருளாக இல்லாத ஒரு பொருள். 2. மற்றொரு பொருளிலிருந்து வருவிக்கப்படும் ஒரு பொருள். 3. முந்தையக் கட்டமைப்பிலிருந்த வளரும் பொருள்.

derm : மெய்த்தோல்.

derma : தோலின் அடிப்பகுதித் தோல்.

dermabra : தோல் மரு நீக்கம் : பட்டைச்சீலை மூலமாக அல்லது எந்திரவியல் முறைகள் மூலமாக தோலின் மேலுள்ள வடுக்கள், பச்சைகுத்தல் போன்றவற்றை நீக்குவதற்கான அறுவைச் சிகிச்சை முறை.

dermal : தோல்சார்.

dermatic : dermic : தோலாலான.

dermatatrophia : தோல்சுருக்கம் : உடல்நலிந்து தோல் சுருங்குதல்.

dermatitis : தோல் அழற்சி : தோலில் உண்டாகும் வீக்கம்; தோல் தடிப்பு நோய் என்றும் கூறுவர்.

dermatocellulitis : திசு அழற்சி : தோலுக்கடியிலுள்ள இணைப்புத் திசுக்கள் வீக்கமடைதல்.

dermatocoele : தோல் மடிதல் : வீக்கமடைந்த தோலும், தோலடித் திசுவும் தளர்ந்து மடிப்புகளாகி விடும் போக்கு.

dermatoid : தோல் சார்ந்த; தோல் போன்ற; தோலில் உருவான : தோல் போன்ற அல்லது தோல் தொடர்பான.

dermatoglyphics : தோலியல்; தோல் ரேகையியல்; ரேகை ஆய்வு : விரல் நுனிகள், உள்ளங்கைகள், பாதங்கள் ஆகியவற்றின் தோலில் காணப்படும் கோடுகளை ஆராய்ந்து வளர்ச்சி முரண்பாடுகளை அறிதல்.

dematography : தோல் உட்கூற்றியல்.

dermatologist : தோலியல் வல்லுநர்; சருமவியல் மருத்துவர்; தோலியலார் : தோல் நோய்களை ஆராய்ந்து குணப்படுத்தும் வல்லுநர்.

dermatology : தோல் ஆய்வியல்; தோலியல் : தோல், அதன் கட்டமைவு, செயற்பணிகள், தோலில் உண்டாகும்