பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dermatome

376

dermoid


நோய்கள், அவற்றுக்கான சிகிச்சை முறை ஆகியவை குறித்து ஆராயும் அறிவியல்.

dermatome : தோல் வெட்டு கருவி; தோல் செதுக்கி; தோல் வெட்டி : தோல் மாற்றுச் சிகிச்சைக்காகத் தோலைப் பல்வேறு கனஅளவுகளில் துண்டு களாக வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி.

dermatomycosis : தோல் பூசண நோய் : தோலில் ஏற்படும் பூசண நோய்.

dermatomy ositis : தோல் வீக்கம்; தோல் தசையழற்சி : தோலிலும் தசைகளிலும் ஏற்படும் கடுமையான வீக்கம். இதனால், இழைம அழற்சியும், தோல் நலிவும் ஏற்படுகிறது.

dermatophytes : தோல் பூசணம் : மேல் தோலைப் பாதிக்கும் பூசண வகை.

dermatophytosis : தோல் பூசண நோய்; தோல் தாவர நோய் : பூசண வகைகளினால் தோலில் ஏற்படும் நோய்.

dermatoplasty : தோல் மாற்று அறுவைச் சிகிச்சை : காயம், அறுவைச்சிகிச்சை அல்லது நோய் காரணமாக உண்டாகும் சருமக்கோளாறினை மூடுவதற்கு உயிருள்ள தோலினை மாற்றிப் பொருத்துதல்.

dermatosis : தோல் நோய் வகை; வீக்கமிலா தோல் நோய் : தோல் நோய்களைக் குறிக்கும் பொதுவான சொல்.

dermatotherapy : தோல் சிகிச்சை : தோல் நோய்களுக்குச் சிகிச்சை யளித்தல்.

dermatotome : தோல் அறுவைக் கத்தி : 1. தோலை அல்லது சிறிய கட்டிகளை கீறிப் பிளப்பதற்கான ஒரு கத்தி. 2. ஒரு புற நரம்பு வேருக்கு நேரிணையான தோலின் பகுதி.

dermatozoonosis : ஒட்டுண்ணித் தோல் நோய் : விலங்கு ஒட்டுண்ணி மூலம் உண்டாகும் ஒரு தோல் நோய்.

dermis : உண்மைத் தோல்; உட் தோல்; உட்சருமம் : மேல் தோலுக்குக்கீழ் உள்ள தோலின் படுகை.

dermoglyphics : தோல் பிளவு ஆய்வு : விரல்கள், பாதங்கள், உள்ளங்கைகள், குதிங்கால் ஆகியவற்றிலுள் பிளவுள தோல் பிளவுகளின் அமைப்பு முறைகளை ஆராய்தல்.

dermographia : கீறல் தழும்பு; சரும வரைவியல் : மழுங்கல் ஊசி அல்லது நகம் கீறியதால் ஏற்படும் தழும்பு.

dermoid : தோல் நீர்க் கட்டி; தோலிய : பல்வேறு தோல்