பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Dermojet

377

desipramine


தொங்கல்களையுடைய தோலினால் பொதியப்பட்டுள்ள நீர்க்கட்டி. இது புருவம், முக்கு, உச்சந்தலை ஆகியவற்றில் காணப்படும். இவை வீக்கமடைந்த நோய் பீடிக்கக் கூடும்.அப்போது இவற்றை கீறி விடவேண்டியிருக்கும்.

Dermojet : டெர்மோஜெட் : தோலுக்குள் அழுத்தம் மூலம் திரவங்களைச் செலுத்துவதற்கான ஒரு கருவியின் வணிகப் பெயர். இது வலியில்லாத ஒரு முறை.

dermomycosis : தோல் காளான் நோய் : தோல் காளான் கிருமிகளால் உண்டாகும் தோல் நோய்.

Dermovate : டெர்மாவேட் : குளோபெட்டாசோல் புரோப்பியோனேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

desaturation : ஆபூரிதமாக்கம் : ஒரு பூரிதமடைந்த கரிமக் கூட்டுப்பொருளை ஒரு பூரிதமடையாத கூட்டுப்பொருளாக மாற்றுவதற்கான ஒரு செயல் முறை.

Descemet's membrane : டெஸ்ஸிமெட் சவ்வு : விழிவெண்படலத்தின் பின்பக்கப் பரப்பிலுள்ள உள்வரித்தாள் சவ்வின் ஆதாரச் சவ்வு. ஃபிரெஞ்சு உடல் உட்கூறியல் அறிஞர் ஜீன் டெஸ்ஸிமெட் என்பவரின் பெயரால் அழைக்கப்பட்டது.

desensitization : கூருணர்வு நீக்கம்; உணர்வழிப்பு; உணர்ச்சி நீக்கம் :கூருணர்வினைக் குறைப் பதற்காக அல்லது நீக்குவதற்காகக் காப்பு மூலங்களை (antigens) ஊசி மூலம் செலுத்துதல்,

Deseril : டெசெரில் : மெத்தி செர்கிடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

deserpidine : டெசெர்ப்பிடின் : கூருணர்வைக் குறைக்கும் திறனுடைய செர்பின் என்ற மருந்துடன் தொடர்புடைய ஒரு மருந்து.

desferrioxamine : டெஸ்ஃபெரியோக்சாமைன் : ஒர் அயம் நீக்கி மருந்து. இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதற்கு அடிக்கடி இரத்தம் செலுத்துவதால் உண்டாகும் இரும்பு நச்சினை நீக்குவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

desiccation : உலர்த்தல் : ஆரோக்கிய முதுகெலும்புத் தகட்டிலுள்ள நீர்த்திண்டு விளைவினைக் குறைத்தல்.

designer antibody : மாதிரித் தற்காப்புமூலம்: ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மரபணு முறைப்படி உருவாக்கப்பட்ட ஒரு நோய்த்தடைக்காப்பு புரதப் பொருள்.

desipramine : டெசிப்பிராமின் : மனச்சோர்வினை நீக்கும் ஒரு மருந்து.