பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

destanoside

378

desynchronosis


deslanosíde : டெஸ்லானோசைட் : இயற்கையான கிளைக் கோசைடு, இது இதய நோயைக் குணப்படுத்தும் மருந்து.

desktop hypoglycaemia : சர்க்கரைத் தாழ்நிலைக் கணிப்புத் தவறு : நோயாளியின் இரத்தத்தைப் பெறும்போதோ, அதைப் பயன்படுத்தும் போதோ நேரும் தவறுகளால் அந்த நோயாளிக்குச் சர்க்கரைத் தாழ்நிலை உள்ளது எனத் தவறாக கணிக்கப்படுதல்.

desloughing : பொருக்கு அகற்றுதல் : காயத்தின் பொருக்கினை அகற்றும் முறை.

desmopressin : டெஸ்மோப்பிரசின் : மிகுதியான சிறுநீர்ப் போக்கினை நிறுத்தும் மருந்து.

desmitis : இணைப்பிழையழற்சி; நாண் அழற்சி; பிணைய அழற்சி : இணைப்பிழையில் அழற்சி ஏற் படும் நிலைமை.

desmocyte : ஏந்தணு; தாங்கணு; தாங்கும் அணு; ஆதரவணு : பலம் தரும் திசுவணு. திசுவுக்கு ஆதாரமாக விளங்கும் அணு.

desmoid : வயிற்றுத்தசை : 1. அடுக்குத் தசையின், குறிப்பாக மலக்குடல் அடிவயிற்றின் தசைநார். 2. தசை நார்க்கட்டி அல்லது இழைநார்த் தசைக் கடடி.

desmolase : டெஸ்மோலேஸ் : ஒரு வகை நொதி. இது, ஒர் அடி மூலக்கூறாக அமைவதற்கு சில வேதியியல் குழுமங்களைச் சேர்ப்பதற்கு வினையூக்கம் செய்கிற ஒரு செரிமானப் பொருள்.

desmosome : டெஸ்மோசோம் : புறத்தோல் உயிரணுக்களுக் கிடையிலான நெருங்கிய தொடர்புடையதும், இணைப் புடையதுமான ஒரு பகுதி.

desmotomy : இணைப்பிழைப் பிளப்பு; நாண் பிளப்பு; பிணையப் பிளப்பு : இணைப்பிழையைப் பிளந்து ஆய்வு செய்தல்.

desmoplasia : ஒற்றை உயிரணு அடுக்கு அழுத்தம் : உயிர்ம உட்பிழம்புக் கட்டமைப்புக் கூறாகிய ஒர் அடர்த்தியான உயிரணுத்தாங்கி வினையூக்கம். இதில் உக்கிரமான புறத்தோல் உயிரணுக்கள், உயிரணுக்கள் ஒற்றை அடுக்காக அழுத்தப்படுகிறது. இது மார்பகத்தின் ஊடுருவும் நாளப்புற்று நோயில் முக்கியமாகக் காணப்படும்.

desoxy corticosterone : டெசோக்சிகார்ட்டிகோஸ் டெரோன் : டியாக்சிகார்ட்டோன் அசிட்டேட் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.

desquamation : செதிளுதிர்வு; செதிலுறிவு : செதிள் உதிர் வித்தல்.

desynchronosis : நேரத்திரிபு மூளைக் கோளாறு : ஒருவரின்