பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

detached retina

379

development


தற்போதைய இடஅமைப்பு நேரத்துக்கும், அவர் பழக்கப்பட்ட நேரத்துக்குமிடையிலான வேறுபாடு காரணமாக ஏற்படும் உள்முக உயிரியல் கடிகார மூளைத் திரிபுக் கோளாறு.

detached retina : பிரிந்த பின் விழித்திரை : கண்விழியின் பின்புறத் திரையில் நிறமி மேல் தோலிழைமத்திலிருந்து நரம்புப் பின்புறத் திரையைப் பிரித்தல்.

detachment : பிரிப்பி.

detachment, Retina : விழித்திரைப் பிரிப்பு.

detergent : சலவைப் பொருள்; தூய்மையாக்கி; மாசுவகற்றி : துப்புரவு செய்யும் பொருள்; மாசு கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள்.

deterioration : நோயாளி மோசமடைதல்; நோய் மிகைத்தல்; நலக் கேடு : நோயாளியின் நிலைமை படிப்படியாக மோசமடைதல்.

determinant : தீர்வுப்பொருள் : ஒரு குறிப்பிட்ட பண்பைத் தீர்மானிக்க உதவும் கூறு.

determination : தீர்மானித்தல்; உறுதி செய்தல் : ஒரு பொருளின் இயல்புத் தன்மையை வரையறை செய்தல்.

detoxication : நஞ்சகற்றுதல்; நச்சு முறித்தல்; நச்சு நீக்கம்; நச்சுமுறி : ஒரு பொருளிலுள்ள நச்சுத் தன்மையை நீக்கும் முறை.

detritus : தேய்மானத் திரள் பொருள்; சிதை பொருள்; கசடு : உராய்வினால் வரும் நாட்படு தேய்வினால் உண்டாகும் பொருள்.

detrusor : சிறுநீர்ப்பைத் தசை : சிறுநீர்ப்பை அமைந்துள்ள தசை.

Detol: டெட்டால் : குளோரோக் சைலினால் வகையைச் சேர்ந்த நோய் நுண்மம் நீக்கும் பொருளின் வணிகப் பெயர்.

detumescence : வீக்கத் தணிவு : வீக்கம் குறைதல். திண்மைத் தணிவு.

deutoscolex : நுண்நீர்க்கட்டி : நாடாப்புழு நீர்க்கட்டியின் உள் சுவரில் உருவாகும் குட்டி நீர்க் கட்டி.

deuteranopsia : பச்சை நிறக்குருடு : நிறக்குருடு வகைகளில் ஒன்று. பச்சை நிறத்தைக் காண இயலாத நிலைமை. சிவப்பு நிறத்தையும் பச்சை நிறத்தையும் பிரித்து இனம் காண இயலாத கண் நோய்.

devascularisation : இரத்த ஊட்டக் குறைவு; குருதி ஒட்டக் குறைவு : உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அல்லது திசுவுக்கு இரத்த ஒட்டம் குறை வாக இருப்பது.

development : வளர்ச்சி.