பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

deviation

380

dextrase


deviation : விலக்கம்; விலகுதல்; மாறுபடுதல்; திறம்புதல்.

deviation, septal : பிரிசுவர் விலக்கம்.

Devic's disease : டேவிக் நோய் : கண் நரம்புத்தசையழற்சி நோய். ஃபிரான்ஸ் நரம்பியல் வல்லுநர் டேவிக் என்பவர் கண்டறிந்த நோய்.

devil's grip : தசைவாத வீக்கம் : கொள்ளை நோய் போல் பரவும் தசைவாத வீக்கம். இதனால் விலா எலும்பில் வலி உண்டாகும். பார்க்க; பார்ன் ஹோல்ம் நோய்.

devitalisation : உயிரறற்தாக்குதல் : உயிரூட்டமளிக்கும் பண்பு அகற்றப்படுதல்.

dew : பனித்திவலை; பனித்துளி.

dewdrop appearance : பனித்துளித் தோற்றம் : இதயச் சுவர்களில் காணப்படும் மிகச் சிறிய உருண்டை முடிச்சுகள்.

deworming : குடற்புழு நீக்கல்; குடற்புழு அகற்றல்; குடற்புழு ஒழித்தல் :குடற்புழு நோயாளியின் உடலிலிருந்த குடற்புழுக்களை நீக்குதல் அல்லது அழித்தல்.

dexamethasone : டெக்சாமேத்தாசோன் : வீக்கத்தைக் குறைக்கும் கார்ட்டிசோன் என்ற பொருளைப் போல் 30 மடங்கு செயல் திறமுடைய மருந்து. சிலசமயம் மூளை இழைம அழற்சியைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது.

dexamphetamine : டெக்சாம்ஃபீட்டாமின் : ஆம்ஃபிட்டாமின் போன்ற ஒரு மையச் செயலூக்க மருந்து. சில சமயம், உடல் பருமன் நிலையில் பசியைக் குறைக்கப் பயன்படுத் தப்படுகிறது.

dexedrine : டெக்செட்ரின் : டெக்சாம்ஃபீட்டாமின் மருந்தின் வணிகப் பெயர்.

dextran : டெக்ஸ்டிரான் : இரத்தத்தில் நுண்ணிழைமங்கள் மிதப்பதற்குரிய அடிப்படை ஊனிராகிய நிணநீருக்குப் பதிலாகப் பயன்படுத்தும் பொருள். சர்க்கரைக் கரைசல்கள் ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியா வினைபுரிவதால் இது கிடைக்கிறது. இரத்தப்போக்கு, அதிர்ச்சி போன்ற நிலைகளில் 6% அல்லது 10% கரைசலாகப் பயன்படுத்தப்படுகிறது.

dextranase : டெக்ஸ்டிரானேஸ் : சுக்ரோசிலிருந்து (கரும்பு வெல்லம்) டெக்ஸ்டிரான் உருவாவதைக் குறைக்கும் ஒரு வகைச் செரிமானப் பொருள் (என்சைம்). பல்வீக்கத்தைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப் படுகிறது.

dextrase : டெக்ஸ்ட்ரேஸ் : டெக்ஸ்ட்ரேஸைப் பிளந்து