பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dextrin

381

diabetes mellitus


லேக்டிக் அமிலமாக மாற்றும் குணமுடைய ஒருவகை நொதி,

dextrin : டெக்ஸ்டிரின் : மாவுப் பொருள், நீரிடைச் சேர்மப் பிரிப்பின்போது (ஹைட்ராலிசிஸ்) உண்டாகும் பன்முகச் சர்க்கரைப் பொருள். இது கரையும் தன்மையுடையது.

dextrocardia : இதய இடமாற்றம்; வல இதயம் : இதயம் மார்புக் கூட்டின் வலப்புறமாக இட மாற்றி இயற்கையிலேயே அமைதல்.

dextromethorphan : டெக்ஸ்டிரோமெத்தார்ஃபன் : இருமலைக் கட்டுப்படுத்தும் மருந்து. இது, மிட்டாய், பாகு வடிவில் கிடைக்கிறது.

dextroposition : வலமிருத்தல்; வலது பக்கம் அமைதல் : உடலில் இயல்பாக இடது பக்கத்தில் இருக்க வேண்டிய ஒர் உறுப்பு இயல்புத்தன்மை மாறி வலது பக்கத்தில் அமைந்திருத்தல்.

dextrose : பழச் சர்க்கரை : கரையக் கூடிய தனியொரு சர்க்கரைப் பொருள். இது உடலில் நீர் வற்றிப்போதல், அதிர்ச்சி போன்ற நிலைகளில் நரம்பு ஊசிமூலம் செலுத்தப்படுகிறது.

dhobic itch : வண்ணார் சிறங்கு; வண்ணார் படை : அரை, இடுப்பு, வயிறு, தொடை சேரும் இடத்தில் உண்டாகும் படர்தாமரை நோய். இந்நோய் சலவைத் தொழிலாளர் துணிகளை ஒன்றாக வைத்துத் துவைத்து, உலர்த்திப் பிரித்துக் கொடுக்கும் போது படைக்கு காரணியான கிருமி பரவும் என்ற நம்பிக்கையினால் பெயர் ஏற்பட்டது.

Diabenyline : டிபெனிலின் : ஃபினோக்சிபென்சாமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

diabesity : சர்க்கரைக் கொழுமம் : பருவ வயதில் துவங்கும் சர்க்கரை நோய்க்கு உடல் பருமனுக்கும் தொடர்புடைய ஒரு பொதுவான நோய்க்கிருமி.

diabetes : நீரிழிவு நோய்; சர்க்கரை நோய் : இரத்தத்திலும் சிறுநீரிலும் குறைவாகச் சர்க்கரை தோன்றும் நீரிழிவு நோய். இனிப்பு இல்லா நீரிழிவு (diabetes insipidus) எனப்படும். இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரைச்சத்து மிகுதியாகத் தோன்றுவதால் உண்டாகும். நீரிழிவு நோயை 'சர்க்கரை நீரிழிவு' (diabetes mellitus) எனப்படும்.

diabetes insipidus : சர்க்கரையிலி நீரிழிவு : குருதியிலும் சிறுநீரிலும் சர்க்கரைச் சத்தில்லாமல் தோன்றும் நீரிழிவு நோய்.

diabetes mellitus : சர்க்கரை நீரிழிவு : குருதியிலும் சிறுநீரிலும்