பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

diabetic

382

Diana complex


சர்க்கரைச் சத்து மிகுதியாகத் தோன்றும் நீரிழிவு நோய்.

diabetic : நீரிழிவு நோயாளி.

diabetologist : சர்க்கரை நோய் வல்லுநர்; நீரிழிவு நோய் வல்லுநர் : சர்க்கரை நோய் பற்றிய கல்வியிலும் சிகிச்சை முறைகளிலும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்.

Diabinese : டயாபினீஸ் : நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் குளோரோபுரோப்பாமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

diadochokinesia : உள்-வெளிப் புரட்டல் : கைகால் தசைகளை உட் புறமாகவும் வெளிப்புறமாகவும் வேகமாக, அடுத்தடுத்துப் புரட்டும் திறன் பெற்றிருத்தல்.

Diaginol : டாயாஜினால் : சோடியம் அரிட்ரிசோயேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Diagnex blue test : வயிற்று அமிலச்சோதனை : வயிற்றுக்குள் குழாயைச் செலுத்தாமல் வயிற்றில் அமிலம் உற்பத்தியாகிறதா என்பதைக் கண்டறியும் ஒரு சோதனை. இந்தச் சோதனைக்குப் பயன்படும் பொருள் வாய்வழி உட்கொள்ளப்படுகிறது. சிறுநீரைப் பரிசோதனை செய்துமுடிவு அறியப்படுகிறது.

diagnosis : நோய் நாடல்; நோய் அறிதல்; அறிதியிடல் : நோயாளி யின் புறக்குறிகளின் உதவியால் அவர் எந்த நோயினால் அவதியுறுகிறார் என்பதைக் கண்டறிதல்

diagnostic : நோயறி; நோய்க்குறியான அறுதியீட்டு : நோயின் புறக்குறிகள் மூலம் நோயுறுதி செய்தல்.

diagram : வரைபடம்.

dialysis : கலவைப் பிரிவினை; ஊடு பிரித்தல்; சவ்வூடு பிரிப்பு : இடைச் சவ்வூடாகப் பரவச் செய்து சிறுநீர்க் கலவைப் பொருள்களைப் பிரித்தல்.

diameter : விட்டம்.

Diamicron : டையாமிக்ரோன் : கிளிக்கோசைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

diamino diphenylsulphone : டயாமினோடைஃபினைல்சல்ஃபோன் : முறைக்காய்ச்சல் (மலேரியா), தொழுநோய் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப் படும் ஒரு செயற்கை மருந்து.

diamorphine : டயாமார்ஃபின் : நோவாற்றும் மருந்தாகப் பயன் படுத்தப்படும் அபினிச் சத்திலிருந்து (மார்ஃபின்) கிடைக்கும் வழிப்பொருள். வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தக்கூடியது. எனினும், இது போதைப் பழக்கத்தை உண்டாக்கிவிடக் கூடும்.

Diamox : டயாமோக்ஸ் : அசிட்டா சோலமைடு என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Diana complex : டயானா மனநிலை : பெண்ணிடத்தில் காணப்படும் ஆண்குணங்கள்.