பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

digitoxin

387

diiodotyrosine


அழுத்தப்பதிவு : கணினியைப் பயன்படுத்தித் தமனி இரத்த ஒட்டத்தினை ஆராய்ந்தறிதல். சுற்றியுள்ள திசுக்கள் மூலம் உண்டாகும் உருக்காட்சியைக் கணினி நீக்கிக்காட்டுகிறது.

digitoxin : டிஜிடாக்சின் : செடி மருந்தின் ஒரு கிளைக்கோசைட் (டிஜிட்டாலின்) வேதியற் பொருள்.

digoxin : டிஜோக்சின் : டிஜிடாலிஸ் செடி மருந்தின் லெனோக்சின் என்ற கிளைக்கோசைட்.

diguanil : டிகுவானில் : மெட்ஃபார்மின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

dihydrallazine : டைஹைட்ராலாசின் : மட்டுமீறிய இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு கொடுக்கப்படும் மருந்து.

dihydrocodeine tartrate : டைஹட்ரோகோடைன் டார்ட்ரேட் : இருமல், சுவாசக்கோளாறுகள், வேதனைதரும் காயங்கள் ஆகியவற்றைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மருந்து.

dihydroergotamine : டைஹட்ரோஎர்கோட்டமின் : கடுமையான ஒற்றைத் தலைவலிக்குப் பயன் படுத்தப்படும் எர்கோட்டமின் என்ற மருந்திலிருந்து கிடைக்கும் மருந்து.

dihydroemetine : டைஹடிரோ எமட்டின் : இதய நச்சுத்தன்மை குறைவாகவுள்ள எமட்டின் தயாரிப்புப்பொருள். பெருங் குடல்சீழ் புண்ணைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

dihydromorphinone : டைஹட்ரோமர்ஃபினோன் : உயர்ந்த அளவு ஆற்றலுடைய ஒரு வகை நோவகற்றும் மருந்து. அபினிச்சத்து போன்றது; குறைந்த காலம் வினைபுரியக் கூடியது. கடுமையான இருமலைத் தணிக்க அரிதாகப் பயன்படுத் தப்படுகிறது.

dihydrostreptomycin : டைஹைட் ரோஹ்டிரப்டோமைசின் : நுண்மங்களிலிருந்து கிடைக்கும் ஸ்டிரப்டோமைசின் என்ற நுண்ம எதிர்ப்புப் பொருளிலிருந்து எடுக்கப்படும் வழிப் பொருள். அதே நோக்கத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

dihydrotachysterol : டைஹைட்ரோடாகிஸ்டெரால் : எண்ணெயி லிருந்து தயாரிக்கப்படும் மருந்து. இரத்தத்தில் கால்சியத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

diiodohydroxyquinoline : டை அயோபோஹைட்ராக்குவினோலின் : வயிற்றுப்போக்கின் போது எமிட்டின் டயோடோக்கின் என்ற மருந்துடன் சேர்த்துக் கொடுக்கப்படும் மருந்து.

diiodotyrosine : டைஅயோடோ டைரோசின் : தைராக்சின் அடங்கி யுள்ள ஒரு கரிம அயோடின்.