பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

diphosphanates

diplopia


படும் மருந்து. இது அபினிச் சத்து போன்று வினை புரியக் கூடியது. இது சுவாச மையத்தைச் சமனப்படுத்துகிறது. வாய் உலர்ந்து போவதைத் தடுக்கிறது.

diphosphanates : டைஃபாஸ்ஃபானேட்ஸ் : எலும்பு திருகு நோயில் எலும்பு திருகுவதைக் குறைக்கப்பயன்படுத்தப்படும் மருந்து. இதனை வாய் வழியாகவும் கொடுக்கலாம்.

diphtheria (diphtharitis) : தொண்டை அழற்சி நோய் (டிஃப் தீரியா தொண்டை அடைப்பான்; தொண்டையடைப்பான் நோய் : காற்றுகுழல் தோல் போன்ற சவ்வினால் அடைக்கப்படுவதால் உண்டாகும் தொண்டைத் தொற்றுநோய்.

diphtheroid : டிப்தெராய்ட் : 1. தொண்டை அழற்சி நோய் (டிஃப்தீரியா) போன்ற ஒரு நோய். 2. தொண்டை அழற்சி நோய்க் கிருமியினால் உண்டாகாத ஒரு போலிச் சவ்வு.

diphlline : டைஃபைலின் : இது ஒரு தியோஃபைலின் தயாரிப்பு, இது அமில ஊடகத்தில் நிலைப்பாட்டுடன் இருக்கும். குடல் மென்சவ்வில் எரிச்சலைக் குறைக்கும்.

dipipanone : டிப்பிப்பானோன் : செயற்கை அபினிச் சத்துப் பொருள். தூக்க மருந்தாகவும், நோவகற்றும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

diplegia : கால் முடக்குவாதம்; இணை அங்கவாதம்; ஈரங்க வாதம்; முழுவாதம் : இரு கால்களிலும் ஒரே மாதிரியாக முடக்குவாதம் ஏற்படுதல். இது பெரும்பாலும் பெருமூளையில் ஏற்படும் சேதம் காரணமாக உண்டாகிறது.

diploe : பஞ்சுத் திசு : மண்டையோட்டு எலும்புகளின் இரு தளப் பரப்புகளிடையிலான ஒரு குறிப்பிட்ட அளவு மச்சைக் குழிவுடைய பஞ்சுபோன்ற எலும்பு.

diploid : முழு இனக்கீற்றுகள் : உடல் உயிரணுக்களில் இரு இனக்கீற்றுத் தொகுதிகளையுடைய முழு இனக்கீற்றுகள்.

diplopia : இரட்டைப் பார்வைக் கோளாறு; இரட்டைத்தோற்றம்; இரு காட்சி : ஒரே பொருள்