பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dipping

391

disarticulation


இருக்கும்போது அது இரண்டாகத் தோன்றும் பார்வைக் கோளாறு.

dipping : விரல் சோதனை : 1. அகட்டு நீர்க்கோவை எனப்படும் மகோதர நோயின்போது உறுப்புகளையும் கட்டிகளையும் தொட்டுணர்ந்து ஆய்வு செய்யும் ஒரு தனிவகை கைச்சோதனை முறை. இதில் விரல்களை அடி வயிற்றில் வைத்த அடிவயிற்றுச் சுவர் அழுத்தப்படுகிறது. 2. ஒரு கரைசலில் ஒரு பொருள் அமிழ்தல்.

Diprivan : டிப்ரிவான் : டிசோப்ரோஃபோல் என்னும் மருந்தின் வணிகப் பெயர்.

diprophylline : டிப்ரோஃபைலின் : மூச்சுக் குழாய்த் தசையினைத் தளர்த்தும் மருந்து. அதேசமயம் இது நெஞ்சுப்பைத் தசையினை தூண்டிவிடுகிறது. எனவே, இது ஈளை நோய் (ஆஸ்துமா) நெஞ்சடைப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

dipsomania : குடிவெறி : போதை தரும் மதுபானங்களைக் குடிக்க வேண்டும் என்று ஏற்படும் பெரு வேட்கை.

dipsomania : தணியா மது வேட்கை : ஆல்கஹால் கலந்த மதுபானங் களை அருந்த வேண்டும் என்ற கட்டுக்கடங்காத தணியாத வேட்கை.

diptera : சிறகுப்பூச்சிகள் : வாய்ப் பகுதிகளில் ஊடுருவும் அல்லது உறிஞ்சும் தன்மையுடைய இரு இறகுகள் கொண்ட பூச்சிகள். ஈ, கொசு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள்.

dircission : ஆடிக்கூண்டு பிளவுறுத்தல்; கண்வில்லை உறைத் துளைப்பு; கிழித்தல் : கண்புரை நோயின்போது ஆடிப் பொருளை ஈர்த்துக் கொள்வதற்கு ஆடிக் கூண்டினைப் பிளவுறுத்தல்.

direct : நேர்.

directly observed therapy : நேரடி நுண்ணாய்வுச் சிகிச்சை (DOT) : ஒரு நோயாளிக்கு மருந்தினை வாய்வழியாகக் கொடுத்து, அவர் அதனை உட்கொள்வதை நேரில் பார்த்தல். இது காசநோய்ச் சிகிச்சையில் மிக முக்கியமானது. ஏனென்றால், இதில் மருந்து முறையாக உட்கொள்ளப்படாவிட்டால் மருந்து எதிர்ப்பு உயிரிகள் தோன்றக்கூடும்.

Direma : டைரெமா : ஹைட்ரோ குளோரோத்தியாசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

disability : ஊனம்; இயலாமை : ஒருவர் இயல்பான முறையில் தனது காரியங்களைச் செய்ய முடியாத அளவுக்கு அவருடைய உடம்பில் பழுது ஏற்பட்டிருத்தல்.

Disalcid : டைசால்சிட் : சால்சாலேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

disarticulation : மூட்டு அறுவை; மூட்டுப்பிரிப்பு : ஒரு மூட்டில்