பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disoblitersation

394

disseminated sclerosis


ஏற்பட்டிருக்கலாம் அல்லது அடிக்கடி உண்டாகலாம்.

disoblitersation : தமனி அடைப்பு நீக்கம்; அடைப்பெடுத்தல் : இதயத்திலிருந்து இரத்தம் கொண்டு செல்லும் நாளமாகிய தமனியில் ஏற்படும் அடைப்புகளை நீக்குதல்.

disodium cromoglycate : டை சோடியம் குரோமோகிளைகேட் : ஒவ்வாமையினால் உண்டாகும் விமானப் பயணநோய்க்குப் பயன் படுத்தப்படும் மருந்து.

disoprofol : டைசோப்ரோஃபோல் : மயக்க மருந்தாக நரம்புவழி செலுத்தப்படும் மருந்து. இது குறுகிய காலம் செயற்படக் கூடியது.

disorder : உடல்நிலைக்கோளாறு; சீர்குலைவு : உடல் அல்லது மன நிலைக் குழப்பம் காரணமாக ஏற்படும் குழப்பமான நிலை.

disorganisation : உறுப்பு திரிபு : ஒர் உறுப்பின் தனித்தன்மைகளை இழக்கும்படி செய்யும் வகையில் அதில் மாற்றம் செய்தல்.

disorientation : மனத்தடுமாற்றம்; நிலைக்குழப்பம் : நேரம், இடம் அல்லது ஆள் தொடர்பாக மனத்தில் ஒருவகைத் தடுமாற்றமான குழப்பநிலை உண்டாதல்.

dispensary : மருந்தகம் : மருத்துவமனையில் தங்காத நோயா களுக்கு மருந்துகள், மாத்திரைகள் கொடுக்கப்படும் ஓர் இடம்.

dispenser : மருந்து கூட்டுநர் : மருந்து சேர்த்தளிப்பவர்.

dispensatory : மருந்து விளக்க நூல் : மருந்துத் தயாரிப்புகளையும் அதன் பயன்பாடுகளையும் விவரித்துக்கூறும் ஒரு நூல்.

displaced : இடம் பெயர்; இடம் மாறி.

disposal : நீங்குதல்; போக்குதல்.

disposition : நிலையமைப்பு.

disproportion : பொருத்தமில்லாமை, வீதமாற்றம்.

dissection : பகுத்தாய்வு; பிளப்பாய்வு; கூறிடல் : புற்றுநோய்ச் சிகிச்சையின்போது திசுக்களைத் தனியாகப் பிரித்தெடுத்து ஆராய்தல்.

disseminated Sclerosis : நடு நரம்புத் தடிப்பு நோய் : நடு நரம்பு மண்டலம் முழுவதும் திட்டுத் திட்டாகத் தடிப்புக் காணும் நோய்.