பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disulfiram

396

doctylography


குலைந்து போதல். 2. சராசரி நிலையிலிருந்து பிறழ்தல்.

disulfiram : டைசல்ஃபிராம் : இம் மருந்து உட்கொண்டவர் பின்னர் ஆல்கஹால் போன்ற வெறியப் பொருளை உட்கொண்டால் குமட்டலும் வாந்தியும் உண்டாக்கக் கூடிய ஒரு கந்தகக்கூட்டுப் பொருள் ஆகும். எனவே, இது குடிபோதைக்கு அடிமையான வர்களுக்கு, அதை முறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

disulphate : டைசல்ஃப்பேட் : இரண்டு சல்ஃபேட் மூல அணுக்களைக் கொண்டுள்ள ஒரு கூட்டுப் பொருள்.

diuresis : சிறுநீர்ப்போக்கு; சிறு நீர் மிகைப்பு; நீர்ப்போக்கு : அளவுக்கு மீறி சிறுநீர் கழிதல்.

diuretics : சிறுநீர்ப்போக்கு மருந்துகள்; சிறுநீர் இறக்கிகள்; சிறுநீர் இறக்க ஊக்கிகள்; நீர் போக்கி; நீரகற்றி : சிறுநீர்க்கழிவினைத் தூண்டக்கூடிய மருந்துகள்.

diurmal : பகவிய.

divergence : விழி திறம்புதல் : ஒரு பொதுவான நிலையிலிருந்து விலகிச் செல்லுதல் அல்லது திறம்புதல்.

divers' paralysis : காற்றழுத்த நோய் : அழுத்தம் மிகுந்த காற்றின் ஊடாக உழைப்பவர்களுக்கு வரும் நோய்.

diverticulosis : குடல் அழற்சி : குடல்களில் பல சிறுபைகள் அமைந்திருத்தல். நீண்டகாலச் சீருணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆட்களின் பெருங்குடலில் இத்தகைய சிறுபைகள் உண்டாகின்றன. இது இழைமக் குறைபாட்டினால் ஏற்படுகிறது. மலச்சிக்கல், இசிவு போன்றவை இந்த நோயின் அறிகுறிகள்.

diverticulum : பக்கப் பை.

division : பகுப்பு; பிரிவு.

Dixarit : டிக்சாரிட் : குளோனிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

dizziness : தலைச்சுற்றல்; மயக்கம்; கிறுகிறுப்பு : கிறுகிறுப்பு: மயக்கம். பெரும்பாலும் மனக் கவலையினால் உண்டாகிறது.

dizy : குழப்பமான; மயக்கமான; தலை சுற்றுகிற.

DNA : டி.என்.ஏ : டி ஆக்சிரிபே நியூக்ளிக் அமிலம். இனக்கீற்று அமிலம்.

dobitamine : டோபிட்டாமின் : இதயத் தசையினை நேரடியாக துண்டிவிடக்கூடிய மருந்து.

Dobutrex : டோபுட்ரெக்ஸ் : டோபுட்டாமின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

doctor : மருத்துவர்.

doctylography : கைரேகை ஆராய்ச்சி : கைரேகைகளின் அமைப்பு, வடிவம், எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்வது