பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

doctylognyposis

397

donor


doctylognyposis : விரல் முடக்கம்; விரல் வளைவு : கை அல்லது கால் விரல்கள் நிரந்தரமாக வளைந்துவிடுவது; தொழு நோய் பாதிப்பால் விரல்கள் வளைவது.

doctylology : விரல் சைகை மொழி; விரல்மொழி : ஊமைகள், செவிடர்களுடன் பேசுவதற்குப் பயன்படும் விரல் சைகை மொழி.

doctylolysis : விரல் இழப்பு; விரல் நீக்கம்; விரல் அகற்றுதல் : விரலை நீக்குதல், விரலை வெட்டி விடுதல்; அறுவை மருத்துவம் மூலம் விரலை சரி செய்தல்.

dog-sick : முழு நோயாளி.

dolmane : டால்மேன் : ஃபுளூராஸ்பாம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

doll's eye sign : பொம்மைக் கண் நோய் : தலையின் திடீர் அசைவு காரணமாகக் கண்களின் அசைவு எதிர்த்திசையில் செல்லுதல். தன்னியலான கண் அசைவுக் கான மைய அமைப்பு முறையில் நைவுப் புண் உண்டாவதால் இது உண்டாகிறது.

Dolobid: டோலோபிட் : டிஃப்ளு னிசால் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

dolor : வேதனை வலி : துன்பம், துயரம், கடுந்துயர்.

Doloxene : டோலோக்சென் : டெக்ஸ்டரோப்போக்சிஃபென் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

dome : முகடு.

domestic : அகம்சார்ந்த.

domiciliary : மனைசார்ந்த.

dormancy : செயலொழுக்கம் : 1. வளர்சிதை மாற்ற நடவடிக்கை வெகுவாகக் குறைந்துள்ள நிலை. 2. நோய் வளர்ச்சி துரிதமாக இல்லாத ஒரு நிலை.

dominant : ஆதிக்க பண்பு; ஓங்கிய; ஆதிக்க மிகைப்பு; விஞ்சுகை : உயிரியஇணைக்கலப்பில் முதல் தலை முறையில் மேம்பட்டு நிற்கும் ஒரு வழிப் பெற்றோர் பண்புக்கூறு.

dominant hemisphere : மூளை ஆதிக்கப் பகுதி : இடக்கைப் பழக்கம், வலக்கைப் பழக்கம் உடையவர்களுக்கு மூளையின் எதிர்ப்பக்கத்தில் உள்ள பகுதி. வலக்கை பழக்கமடையவர்களில் 90% பேருக்கும் இடக்கை பழக்கமுடையவர்களில் 30% பேருக்கும் மூளை ஆதிக்கப் பகுதி வலப்புறம் அமைந்திருக்கும்.

domiphen bromide : டோமிஃபென் புரோமைடு : வாயிலும், தொண்டையிலும் கிருமிகளினால் உண்டாகும் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து.

donor : கொடையாளர்; வழங்கி; கொடுப்பான் : இரத்தம் செலுத் துவதற்கு இரத்தம், அல்லது உறுபபு மாறறு அறுவை சிகிச்சைக்கு உறுப்பு நன்கொடையாக அளிக்கும் ஆள்.