பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dropsy

401

ductless glands


dropsy : நீர்க்கோவை மகோதரம்; பெருவீக்கம்; மீவீக்கம் : உடலின் புழையிடங்கள் தோறும் நீர் திரண்டு தேங்குவிக்கும் நோய்.

drostanolone : டிராஸ்டானாலோன் : உயிர்ப்பொருள் ஆக்கு வதற்குரிய ஒரு பொருள். மார்பு புற்றுச் சிகிச்சையில் பயன்படுத் தப்படுகிறது.

drug : மருந்து : கண்டறியப்பட்ட நோயைத் தடுப்பதற்கும், அந்த நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கும், நோயின் அறிகுறிகள் குறைப்பதற்கும் பொருள் எதனையும் குறிக்கும் பொதுச் சொல். நோயைக் குணப்படுத்தும் மருந்துகளை நோய்ச் சிகிச்சை மருந்துகள் என்றும், சட்ட விரோதமாக உட்கொண்டு அடிமையாகிவிடும் மருந்துகளை போதை மருந்துகள் என்றும் கூறுவர்.

druggist : மருந்து வணிகர்.

drum-ear : செவிப்பறை.

drunkeness : மது மயக்கம்; மதுமை.

drying : உலர்தல்.

Dubin-Johnson syndrome : ரூபின்-ஜான்சன் நோய் : ஈரல் உயிரணுக்களில் இடப்பெயர்வு கோளாறு காரணமாக இரத்தத்தில் பிலிரூபின் மிகுதியாகவுள்ள குடும்ப வழி நோய். அமெரிக்க நோயியல் அறிஞர்கள் இசாடோர் ரூபின், ஃபிராங்க் ஜான்சன் ஆகியோரின் பெயரால் அழைக்கப் படுகிறது.

Dubowitzscore : தசைநலிவு நோய் : பொதுவாக 3-5 வயதுடைய சிறுவர்களுக்கு ஏற்படும் கோளாறு. இந்த நோய் கண்டவர்களுக்குப் படிப்படியாகத் தசை நலிவடையும் இயக்கத் திறன் இழப்பு ஏற்படும். குமர பருவத்தில் அல்லது 20 வயதுகளில் சுவாசத்தடை அல்லது மார் அடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படலாம்.

Duchenne's muscular dystrophy : டஷேன் தசை வளர்ச்சிக் குறைபாடு : பாலியல் தொடர்புடைய மரபியல் மங்கல் நோய். தசை வளர்ச்சிக் குறைபாடுகளில் பொதுவாக காணப்படுகிறது. இது இரண்டு வயதுக்குப்பின் தோன்றி, உடலின் மையம் நோக்கிய உறுப்புத் தசைகளை பாதிக்கிறது. இதனால் பெரும்பாலும் போலி உறுப்புப் பெருக்கம், நெஞ்சுப்பைச் சுருக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. ஃபிரெஞ்சு நரம்பியலறிஞர் கில்லோம் டஷேன் பெயரால் அழைக்கப்படுகிறது.

duct : நாளம்.

ductless : நாளமில்லா.

ductless glands : நாளமற்ற சுரப்பிகள்; நாளமில் சுரப்பு; நாளமில்லா : இழை நாளமில்லாமலே