பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Durabolin

404

dynamic psychology


முக்கியமாக மூன்றாவது, நான்காவது விரல்கள், வலியின்றி உள்ளங்கைைய நோக்கிக் குறுகுதல். டுப்பூட்ரின் விளக்கியது.

Durabolin : டுராபோலின் : நாண்ட்ரோலோன் ஃபினைல் புரோப்பியோனேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

duramater : மூளை மேல் சவ்வு; முருட்டுச் சவ்வு : மூளையையும் முதுகுத் தண்டையும் சூழ்ந்துக் கொண்டிருக்கும் மூன்று பொதியுறைகளில் வெளிப்புறத்திலிருந்து மேல் சவ்வு.

duration : காலநீட்சி; காலவரை : 1. ஒரு கோளாறு இருந்துவரும் சராசரிக் கால அளவு. 2. ஒரு கருப்பைச்சுருக்கத்தின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையிலான கால இடைவெளி.

Duromine : டுரோமைன் : ஃபெண்டர்மைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Durophet : டுரோஃபெட் : ஆஃபிட்டாமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

dust : தூசு;மாசு.

Duvadilan : டுவாடிலான் : ஐசோக் சுப்ரின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

dwarf : குள்ளன் : வளர்ச்சி இயக்கு நீர் (ஹார்மோன்) குறைபாடு காரணமாக வளர்ச்சிக்குத் தடைப்பட்டுக் கூழையாக உள்ள ஆள்.

dwarfism : குள்ளத்தன்மை; கூளை; குறுமை : கேடயச்சுரப்பி சுரப்பாற்றல் இழந்து போவதன் காரணமாக அங்கக் கோணல் அல்லது தடையற்ற வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலையிலும், குடல் ஈர்ப்புச் சக்திக்குறைபாடு, சிறுநீரகம் செயலிழத்தல், குழந்தைக் கணை (ரிக்கெட்ஸ்) போன்ற கடுமையான நோய்களின்போதும் உடல்வளர்ச்சி தடைபடுதல்.

dye : சாயப்பொருள்; சாயம் : தானே வண்ணம் பெற்றுள்ள அல்லது வண்ணமூட்டப்பட்டுள்ள அல்லது வேறொரு பொருளுக்கு வண்ண மூட்டப் பயன்படுத்தப்படுகிற ஒரு பொருள்.

dyflos (DFP) : டிஃப்லோஸ் : இது ஒரு ஃபுளோரின் வழிப்பொருள். எசரின், நியோஸ்டிக்மின் போன்று செயல்படக்கூடியது. எண்ணெயில் இதன் 0.1% கரைசல் கருவிழிப்பாவை விறைப்பு. நோய்க்குப் பயன்படுத்தப்படும். இது ஆர்கனோ பாஸ்பரஸ் கூட்டுப் பொருளாக, வேளாண்மையில் பூச்சிக்கொல்லி மருந்தாகப் பயன்படுகிறது. கூட்டுப்பொருள் மனிதருக்குத் தீங்கு விளைக்கக் கூடியது.

dying : இறத்தல்; சாவு; மரணம்.

dynamic psychology : செயல்திற உளவியல்; வல்லாற்றல் உளவியல் : ஃபிராய்டிய அல்லது