பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dynamometer

405

dysentery


உளவியல் பகுப்பாய்வுக் கோட்பாட்டில் காணப்படுவது போன்ற தன்னறிவில்லாத ஆற்றலின் அல்லது செயலூக்கங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உளவியல்.

dynamometer : திறன்மானி; வலிமை அளவு : உடல் உறுப்புகளின் வலிமையை அளந்து கணிக்கும் கருவி.

Dyne : நொடி விசையழுத்தம் (டைன்) : ஒரு கிராம் எடை மானத்தை ஒரு நொடியில் நொடிக்கு ஒரு சென்டிமீட்டர் அளவு செலுத்தவல்ல அளவு டைய விசையாற்றல் அலகு.

dysaesthesia : தொடுவுணர்வு இன்மை; தொடுவுணர்வுச் சீரின்மை; தொடுவுணர்வுக் கேடு : தொடு உணர்வு இழக்கும்நோய்.

dysarthria : வாய் குளறல் நொய்; பேச்சுக்குளறல்; நாக்குழறல்; குழறுதல் : நரம்பு மற்றும் தசைக் கோளாறு காரணமாகச் சொற்களைச் சரிவர உச்சரிக்க முடியாமல், சொற்களைக் குளறிப் பேசுதல். இந்நோய் கண்டவர்கள் பொதுவாக மிகவும் மெதுவாகப் பேசுவார்கள், உயிர்மெய் எழுத்துக்களின் உச்சரிப்புத் தெளிவாக இரா; சொற்களிடையே இடைவெளி அதிகமிருக்கும்.

dysbasia : நடைமுடக்க நோய் : மைய நரம்புமண்டல நோய்கள் காரணமாக நடப்பதற்குச் சிரமம் ஏற்படுத்தும் நோய்.

dyscalculia : கணிப்புத் திறனின்மை : எண்களைக் கணித்தறியும் திறன் குன்றியிருத்தல்.

dyschezia : மலக்கழிப்புச் சிக்கல்; உருத்திரி; கடுமலர்ச் சிக்கல் : வேதனைதரும் உருவழிப்பு.

dyschondroplasia : எலும்பு வளர்ச்சித்தடை : எலும்பு வளர்ச்சித் தடையினால் ஏற்படும் கோளாறு. இதனால், உடம்பின் நடுப்பகுதி இயல்பாக இருந்தும், கை கால்கள் குட்டையாக இருக்கும்.

dyschromia : தோல்நிறமாற்ற நோய் : தோலின் அல்லது முடியின் நிறமியாக்கத்தில் ஏற்படும் கோளாறு.

dyscoria : கண்மணிப் பிறழ்ச்சி : கண்மணி இயல்பு நிலையிலிருந்து பிறழ்ந்திருத்தல்.

dyscrasia : குருதி நச்சு; தாதுசீர் கேடு; செல்திரிபு : இரத்தத்தில் நச்சுப்பொருள்கள் இருப்பதால் உண்டாகும் நோய்.

dysdiadochokinesia : மாற்று அசைவு முடக்கநோய் : அடுத்தடுத்து விரைவாக மாற்று அசைவுகளைச் செய்ய இயலாதிருத்தல்.

dysentery : வயிற்றளைச்சல்; சீதபேதி; வயிற்றுக்கடுப்பு; இரத்த பேதி : வயிற்றிலிருந்து இரத்தமும்,