பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dysmaturity

407

dyspnoea


புரதச் செறிவுப் பொருள்களிலும் ஏற்படும் அதீதநிலைகள்.

dysmaturity : பிறவி வளர்ச்சிக் குறைபாடு; முதிர்வுக்கேடு : பிறவி யிலேயே வளர்ச்சிக் குறைபாட்டுக்கான அறிகுறிகள். குழந்தை பிறக்கும்போது எடை மிகவும் குறைந்திருத்தல் இந்த அறிகுறிகளில் ஒன்று.

dysmelia : உறுப்புக் குறைபாடு; பிறவி ஊனம்; அங்கக்கேடு : உடல் உறுப்புகள் குறைபாடுகளுடன் இருத்தல்.

dysmenorrhoea : நோவு மாத விடாய்; வலிமிகு மாத விடாய்; சூதக வலி; சூதக வாய்வு; வலிப் போக்க : பெண்களுக்கு கடும் வலியுடன் மாதவிடாய் தோன்றுதல்.

dysorexia : கடும் பசி; இயல்பற்ற பசி; பசிக்கேடு : இயல்புக்கு மீறிய கடும்பசி.

dyspareunia : நோவு கலவி; வலிமிகுப் புணர்ச்சி; புணர்ச்சிச் சிக்கல்; புணர்வலி; புணர்நோவு; இடர்புணர்வு : சில பெண்களுக்கு உடலுறவின்போது நோவு உண்டாதல்.

dyspepsia (dyspepsy) : வயிற்று மந்தம்; செரிமானக் கோளாறு; பசி யின்மை; அசீரணம்; செரிமானக் கேடு; செரியாமை : உணவு செரியாமல் இருத்தல்.

dyspeptic : வயிற்று மந்த நோயாளி : வயிற்று மந்த செரிமானக் கேடு தொடர்பான.

dysphagia : தொண்டைகுழி அடைப்பு; விழுங்க இயலாமை; விழுங்கற்கேடு : தொண்டை உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு உணவை விழுங்குவது கடினமாக இருத்தல்.

dysphasia : மொழித்திறன் கோளாறு; பேச்சுச் சீரின்மை; பேச்சுக்கேடு; உரையிலி : மொழியை உருவாக்கிக் கொள்ளவும், புரிந்துகொள்ளவும் அனுமதிக்கும் மூளை நடவடிக்கை பாதிக்கப்பட்ட நிலை. இதில் பேச்சு உறுப்புகள் பாதிக்கப்படுவதில்லை.

dysplasia : மட்டுமீறிய வளர்ச்சி; இயல்பு பிறழ்ந்த வளர்ச்சி; வளர்ச்சிக்கேடு : திசுக்கள் இயல்புக்கு மீறுதலாக மிகுதியாக வளர்தல்.

dysplastic naevus : தோல் மறு : ஒருவகை தோல் புண். இதில் ஒழுங்கற்ற மறுக்கள் தோன்றும். இந்த மறுவின் மையத்தில் கரு நிறக் கொப்புளம் உண்டாகும் விதைவடிவ மாறுதல்கள் ஏற்படும். இது பொதுவாக உக்கிரமாவதற்கு முந்திய நிலை எனக் கருதப்படுகிறது.

dyspnoea : மூச்சுத்திணறல்; மூச்சிளைப்பு; மூச்சுத் திகைப்பு : மூச்சு விடுவதில் இடர்பாடு; மிகவும் சங்கடப்பட்டு மூச்சு விடுதல்.