பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dyspraxia

408

dyszoospermia


dyspraxia : தசைக்கட்டுபாடிழப்பு : தசைகளின் மீது தானியக்கக் கட்டுப்பாடு இல்லாதிருத்தல்.

dysraphism : நரம்புகுழாய் செயலிழப்பு : முதிர் கரு நரம்பு குழாயில் இயல்பான இணைப்பு ஏற்படாமல் போதல்.

dysrhythmia : ஒழுங்கற்ற இதயத் துடிப்பு; லயக்கேடு :இதயத் துடிப்பு ஒரு சீராக இல்லாதிருத்தல்.

dyssomnia : உறக்கமிழப்பு நோய் : உறக்கம் வராமலிருக்கும் கோளாறு. இதில் உறங்குமளவு, உறக்கத்தரம், உறங்கும் கால அளவு ஆகியவை சீர் குலைந்து போகின்றன.

dystaxia : தானியக்கமின்மை; சீர் இயக்கக்கேடு : தானியக்க அசைவுக் கட்டுப்பாடு இல்லாதிருத்தல்.

dystocia : கடினப்பிள்ளைப்பேறு; பேற்றுக்கேடு : பிள்ளைப்பேறு நடைபெறுதல். கருப்பை வாய் விரிவடைவதில் தாமதம் காரணமாகக் கடினப்பேறு.

dysthymia : மனக்கோளாறு : மனச்சோர்வு உண்டாக்கும் நரம்புத்தளர்ச்சியுடன் கூடிய ஒரு வகை மனக்கோளாறு.

dystonia : தசை விறைப்பு நோய்; இறுக்கத்திரிபு மனக்கோளாறு: தசைகள் விறைத்துப் போகும் நோய். இதில் தசைகளை அசைக்கும்போது கடுமையான வலி உண்டாகும்.

dystrophy : தவறான ஊட்டச் சத்து; உணவுக் குறை; உடற் கோளாறு; வளப்பக் கேடு; வளர்ச்சிக் கேடு : ஒர் உறுப்புக்கு அல்லது தசைத் திசுக்களுக்கு தவறான ஊட்டச்சத்து செல்லுதல்.

dysuria : சூடுபிடிப்பு; சிறுநீரின்மை; கெடு நீரிழிவு; நீர்க்கடுப்பு : சிறுநீர்க் கழிக்கும்போது வலி உண்டாகும் கோளாறு.

dyszoospermia : விந்து உயிரணு குறைபாட்டு நோய் :விந்து உயிரணு ஒழுங்கற்ற முறையில் உண்டாதல்.