பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

abduct

40

abiotrophy


abduct: உடல் நடுத்தசைப் பிடிப்பு: உடலின் நடுப்பகுதியிலிருந்து தசையைப் பிடித் திழுத்தல்.

abducting : கடத்திப் போதல்.

abduction : உடல் நடுத்தசை இழுப்பு; புறப்பெயர்ச்சி; விரிப்பு வெளி வாங்கல்; விலகல்: உடலின் நடுப்பகுதியிலிருந்து தசையை பிடித்திழுத்தல்.

abductor : பிடித்திழுக்கும் தசை வெளிவாங்கி; விரிப்பி: உடலின் நடுப்பகுதியிலுள்ள தசையானது சுருங்குவதால், அது உடலின் நடுப்பகுதியிலிருந்து பிடித்து இழுக்கும் தசை.

abductor digitiminimi : சிறு விரல் புறப்பெயர்ச்சி.

abductor pollicislirevis : கட்டை விரல் புறம்போக்குக் குறுந்தசை.

abductor pollicis longus: கட்டை விரல் புறந்தள்ளும் நெடுந்தசை.

aberrant : பிறழக்கூடிய; நெறி திறம்பிய; மாறுபட்ட: இயல்புக்கு மாறுபடுகிற, பொதுவாக, இது தனது இயல்பான நெறியிலிருந்து பிறழ்ந்து திரிகிற இரத்த நாளத்தை அல்லது நரம்பினைக் குறிக்கிறது.

aberation: நெறிதிறம்புதல்; திரிபு; பிறழ்ச்சி: இயல்பான நெறியிலிருந்து பிறழ்ந்து சுற்றித் திரிதல். உயிரணுக்களின் இனக்கீற்று களில் (குரோமோசோம்) மரபணுப் பொருள்களில் இயல்புக்கு மாறாக இழப்பீடு, சேர்மானம் அல்லது பரிமாற்றம் ஏற்படுவதால், மரபணு அழிவு, இருமடிப்பெருக்கம், தலைகீழ் மாற்றம் அல்லது உள்நிலைப் புடைபெயர்ச்சி உண்டாகி மனக்கோளாறுகள் உண்டாதல்,

abeyance : செயலறு நிலை: தற்காலிகமாக செயலற்று இருத்தல்.

ability: செயல் திறன்.

abiology : உயிரிலாப் பொருள்; ஆய்வியல்.

abiogenesis : முதல் உயிர்த் தோற்றம்; உயிரிலாப் பிறப்பு: உயிரற்ற பொருளினின்றும் உயிர்ப்பொருள் தோற்றம் பெற்றதெனும் கோட்பாடு.

abiogenetic : உயிர் தோர்றவியல்; தற்பிறப்புள்ள: உயிரற்ற பொருளிலிருந்தே உயிர்ப் பொருள் தோற்றம் பெற்றதெனக் கருதும் கோட்பாடு சார்ந்த கொள்கை.

abiogenist : உயிர்த் தோற்றவியலாளர்: உயிரற்ற பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோற்றம் பெற்றதெனக்கருதும் கோட்பாட்டாளர்.

abiotrophy : உயிர்வீரியச் சீர்கேடு: மரபணு சார்ந்த சில வகை உயிரணுக்களின், திசுக்களின் உயிர் வீரியம் உரிய