பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

echocardiography

411

eclipse


echocardiography : புறவொலிச் சாதனம்; இதய எதிரொலிவரைவு : இதயத்தின் கட்டமைப்பையும், அதன் இயக்கத்தையும் ஆராய்ந்து நோயினைக் கண்டறிவதற்கான புறவொலிச் சாதனம்.

echoencephalogram : மூளை எதிரொலிப் பதிவு : தலையின் குறுக்கே செல்லும் புறவெளி அலைகளைப் பதிவு செய்தல். இதன் மூலம் மூளையிலுள்ள கட்டிகள், இரத்தக்கட்டு போன்றவற்றைக் கண்டறியலாம்.

echoencephalography : தலையூடு புறவொலி; மூளை எதிரொலி வரைவியல் : தலையின் குறுக்கே புறவொலி அலைகள் செல்லுதல். இதன் மூலம் மூளையிலுள்ள கட்டிகள், இரத்தக்கட்டு போன்றவற்றைக் கண்டறியலாம்.

echogenic : எதிரொலிப் பரப்பு : மிக உயர்ந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளை எதிரொலிக்கும் மேற்பரப்பு.

echogram : எதிரொலி வரைபடம்.

echograph : எதிரொலி வரைவி .

echography :எதிரொலி வரைவியல்.

echolalia : எதிரொலிப்பு நோய்; சொல் எதிரொலிப்பு : கேட்ட சொற்களை அப்படியே திருப்பிச் சொல்லும் ஒரு வகை நோய். இது பெரும்பாலும் முரண் மூளை நோயின் போதும், மனத்தளர்ச்சியினால் ஏற்படும் பைத்தியத்தின்போதும் உண்டாகிறது.

echophony : குரல் எதிரொலிப்பு.

echoraxia : போலிநடிப்பு; செயல் எதிர்ச் செயல் : மற்றவர்களின் அசைவுகளைத் தன்னறிவில்லாமல் அப்படியே நடித்துக் காட்டுதல்.

echoviruses : எதிரொலிக் கிருமிகள் : நோயில்லாத குழந்தைகளின் மலத்தில் காணப்படும் ஒருவகைக் கிருமிகள். இவை, குழந்தைகளுக்குத் தண்டு மூளைக் கவிகைச் சவ்வழற்சி, சுவாசக் கோளாறு ஆகியவற்றை உண்டாக்குகின்றன. இவற்றில் 30 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.

Eck's fistula : ‘எக்' புண்புறை : கல்லீரல் சிரைக்கும், வலது இதய மேலறைக்குள் செல்லும் இரு குருதி நாளங்களில் ஒன்றுக்கு மிடையிலான ஒரு செயற்கைத் தொடர்பு. ரஷிய உடலியலறிஞர் என்.எக் பெயரால் அழைக்கப்படுகிறது.

eclampsia (eclempsy) : பேறுகால வலிப்பு; கரு இசிவு; சூல்வலிப்பு : கருவுற்றிருக்கும் போது அல்லது மகப்பேற்றின் போது பெண்களுக்குத் திடீரென்று தோன்றும் வலிப்பு நோய்.

eclipse : தொடர் வினை இடைக் காலம் : ஒர் நோய்க்கிருமியினால் ஒர் உயிரணு தாக்கப்