பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ectoparasite

413

eczema


ஒட்டிப்பிறக்கும் இரட்டைக் குழந்தைகள்.

ectoparasite : புற ஒட்டுண்ணி; உடல் ஒட்டுண்ணி; புற ஒட்டுயிர் : தாய் உயிரின் புறப்பரப்பில் வாழ்கின்ற ஒட்டுண்ணி.

ectopia : உறுப்புப் பிறழ்வு; இட மாற்றம்; வேற்றிட இடமகல் : ஒர் உறுப்பு அல்லது உறுப்பின் அமைப்பு பிறழ்நிலையில் அமைந்திருத்தல். இது பிறவியிலேயே அமைந்திருக்கலாம்.

ectopic : புறநிலைக் கருவுறல்; இடம் மாறிய; இடம்பெயர்ந்த; இடம் மாறித்தோன்றும்; இடமகன்ற : பொதுவாக ஆணின் விந்தணு பெண்ணின் சினையை மனிதக் கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாயில் சந்திக்கிறது.

இங்கு கருவுற்ற சினை, பெண்ணின் கருப்பைக்குள் சென்று குழந்தையாக வளர்கிறது. சில சமயம் கரு வெளியேறும் குழாயிலேயே வளரும். சினை நிலைபெற்று வளர்கிறது. இதனைப் 'புற நிலைக் கருவுறல்' என்பர்.

ectothrix : காளான் கிருமி : தலைக்காளான் கிருமியில் ஒரு வகை. இதில் தூவிக்கு வெளியேயும் உள்ளேயும் பொதியாகக் காளான் நுண்துகள் போன்று சிதல் விதைகள் அமைந்திருக்கும்.

ectozoa : புற ஒட்டுண்ணிகள்.

ectrodactyly. ectrodactylia : விரலிழப்பு; பிறப்பில் விரல் குறை; பிறவி உறுப்புக் குறை; விரலற்ற : கைகால் விரல்கள் அல்லது அவற்றின் பகுதிகள் பிறவிலேயே இல்லாதிருத்தல்.

ectromelia : பிறவி முடம் : பிறவியிலேயே கால் அல்லது கை இல்லாமல் பிறப்பது.

ectropion : கண்ணிமை மறிநிலை; இமை மயிர் வெளி மடக்கம்; இமை வெளிப் பிதுக்கம் : அடிக் கண்ணிமை வெளிப்புறமாகத் திரும்பியிருத்தல்.

eczema : படை (கரப்பான் புண்); தோல் படை; ஊறல் நோய், கரப்பான் :தோல் தடிப்பு நோய் வகை. முதலில் தோலின் மீது பட்டை பட்டையாகத் தடிப்பு தோன்றி, பின்னர் அது கொப்புளங்கள் உண்டாகும். இக்