பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Edecrin

414

ehrlichiosis


கொப்புளங்கள் உடைந்து நீர் வெளிப்படும்.

Edecrin : எடெக்ரின் : எத்தா கிரினிக் அமிலத்தின் வணிகப் பெயர்.

edema : வீக்கம்; நீர்க்கோவை.

edge-bone : பிட்ட எறும்பு.

edible : உணவமை.

Edosol : எடோசோல் : உப்பில்லாத உலர்ந்த பாலின் வணிகப் பெயர்.

EDTA : இடிடிஏ : எத்திலின் டயாமின்டட்ரா அசெட்டிக் அமிலத்தின் பெயர்ச்சுருக்கம். உடலிலிருந்து தீங்கு விளைவிக்கும் உலோக அயனிகளை நீக்குவதற்கு இதன் கால்சியம், சோடியம் உப்புகள் பயன்படுத்தப் படுகின்றன.

efcortelan : எஃப்கோர்ட்டிலான் : 1% கோர்ட்டிசால் குழம்பின் வணிகப் பெயர். இது வெப்ப மண்டலப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

Efcortesol : எஃப்கோர்ட்டிசால் : ஒருநிலைபெற்ற கரைசலிலுள்ள கோர்ட்சால் பாஸ்ஃபேட் தயாரிப்பின் வணிகப் பெயர். இது நரம்பு வழியாகச் செலுத்தப்படுகிறது.

effect : விளைவு.

effector : வினையியக்கத் தசை : ஒரு தசை அல்லது ஒரு சுரப்பி, நரம்பிலிருந்து வரும் ஆணைகளுக்கேற்ப வினைபுரிதல், (எ-கா) தசை சுருங்கும் அல்லது விரியும் சுரப்பி அதன் சுரப்பு நீரைச் சுரக்கும் அல்லது சுரப்பை நிறுத்தி விடும்.

effeminacy : பெண்தன்மை : ஆண்மைக்கேடு; மெல்லியல்பு.

effeminate : ஆண்மையற்ற; பெண் தன்மையுள்ள.

efferent : வெளிச்செல் நரம்பு; புற நோக்கு நரம்பு; விடுகை : நாடி நரம்புகளில் வெளிநோக்கிச் செல்கின்ற நரம்பு.

effusion : ஊறுதல்.

ego : தன் முனைப்பு; திமிர்; மமதை : நான் என்னும் ஆணவம், 'தான்' என்ற எண்ணம். தன்னைத் தவிர வேறெதுவும் சிறந்ததில்லை என்ற நினைப்பு.

Ehrlichia : எர்லிச் நோய்க்கிருமி : கோள வடிவிலுள்ள உயிரணுப் பிணைப்பு நோய்க்கிருமி. இது ஒற்றைக் கரு உயிரணுக்களுக்கு அல்லது குருணை வடிவ உயிரணுக்களுக்குப் பதிலாகத் தூண்டுதல் அறிதிறன் கொண்டிருக்கிறது. இது, ஜெர்மன் வேதியியல் அறிஞர் பால் எர்லிச் பெயரால் அழைக்கப்படுகிறது.

ehrlichiosis : ஒட்டுண்ணி நோய் : விலங்குவழி ஒட்டுண்ணி மூலம் பரவும் நோய். இது டெட்ராசைக்ளின் அல்லது டாக்சி சைக்ளின் மூலம் குணமாகிறது.