பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

electrocoagulation

416

electrolyte


electrocoagulation : மின்னியல் குருதிக்கட்டு; மின் உறைவிப்பி : மின் முனைகளின் உதவியுடன் குருதி கசியும் முனைகளில் குருதியை உறையச் செய்யும் அறுவைச் சிகிச்சை முறை.

electrochocochleography (ECoG) : செவி நரம்புத் தூண்டல் பதிவு : செவியின் சுருள்வளை சார்ந்த நரம்புத் தூண்டல் காரணமாக உண்டாகும் வினையாற்றலை நேரடியாகப் பதிவு செய்தல்.

electro convulsive therapy (ECT) : மின்னதிர்வுச் சிகிச்சை (இசிடி); மின் வலிப்பு மருத்துவம் : மனத்தளர்ச்சி நோய்க்குப் பயன் படுத்தப்படும் உடலியல் சிகிச்சை முறை. தலையில் மின் சாதனம் ஒன்றைப் பொருத்திக் குறைந்த அளவு மின்னாற்றலை ஒரு வினாடி செலுத்தி அதிர்ச்சி யுண்டாக்கிச் செய்யப்படும் சிகிச்சை

electrocorticography : மூளை இயக்க நேரப்பதிவு; ஒட்டு மின் வரைவு :அறுவைச் சிகிச்சையின் போது மூளை புறப்பகுதியிலிருந்து இயக்கங்களை நேரடியாகப் பதிவு செய்தல்.

electrocution : மின்வழி மரணம் : எவ்விதமாகவேனும் மின்விசை தாக்கி ஏற்படும் மரணம்.

electrode : மின்முனை : மருத்துவத்தில் மின் சிகிச்சையின் போது மின்விசை உடலுக்குள் செல்கிற அல்லத உடலிலிருந்து வெளியேறுகிற மின்வாய்.

electrode : மின்வாய் : வெற்றுக் கல மின்னோட்டத்தில் இரு கோடி முனைகளில் ஒன்று.

electrodesiccation : மின்னியல் உலர்த்தல் : உடலிலிருந்து திசு வினை உலரச்செய்து, பின்னர் அகற்றுவதற்கான மின்னியல் அறுவைச் சிகிச்சை முறை.

electrodiagnosis : மின்னியல் நோய் நாடல்; மின் அறுதியீடு : நோயினைக் கண்டறிவதில் மின்னியல் வரைபடப் பதிவுமுறையைக் கையாள்தல்.

eleetroencephalogram (EEG) : மூளை மின்னியக்கப் பதிவு (இ.இ.ஜி); மூளை மின்னலை வரைவு : மூளையின் மின்னியல் நடவடிக்கைகளை ஒரு நகரும் காகிதத்துண்டில்பதிவு செய்தல்.

electroencephalograph : மூளை மின்னியக்கப் பதிவுக் கருவி; மூளை மின்னலை வரைவி : மூளையின் மின்னியல் நடவடிக்கைகளை ஒரு காகித துண்டில் பதிவுசெய்யும் கருவி.

electrolysis : மின்பகுப்பு : மின் விசை மூலம் அயனிகளைப் பிரித்தெடுக்கும் முறை.

electrolyte : மின்பகுப்பான்; மின் அயனி; மின்பகுனி : மின் பகுப் புக்கு உதவும் நீர்மப்பொருள். சோடியம், பொட்டாசியம்