பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

elemental diet

418

emaciation


elemental diet : அடிப்படைச் சீருணவு : ஆலிகோபெப்டைடுகள், அமினோ அமிலங்கள், டிஸ்ஸாக்கரைடுகள், மிகக் குறைந்த அளவு கொழுப்பு ஆகியவை அடங்கிய அடிப்படைச் சீருணவு. கடுமையான தீக் காயங்கள் பட்ட நோயாளிகளுக்கு இது பயன்படுகிறது.

elementary body : அடிப்படை உயிர் : கருமையம் முடியுள்ள அடிப்படைப் பொருள்களினுள் சால்மிடியா உயிர்கள் நுழைந்தவுடன் ஆதார உயிரணுவின் மீதுள்ள குறிப்பிட்ட சவ்வு ஏற்பிகளுடன் ஒட்டிக்கொள் கின்றன.

elephantiasis : யானைக்கால் நோய், யானைக்கால் வீக்கம் : நிணநீர்ச்சுரப்புத் தடை காரணமாக ஓர் உறுப்பில் குறிப்பாகக் காலில் உண்டாகும் வீக்கம். இதனால், தோலிலும், தோலடியிலும் உள்ள திசுக்கள் தடிமனாகி விடுகின்றன. வெப்ப மண்டல நாடுகளில் இது அதிகம் காணப் படுகிறது.

elixir : உயிர்நீர் அமுதம்); இனிப்பு நீர்மம்; நீர் மருந்து : இறந்தவர் களுக்கு உயிர் தரவும் பிற உலோகங்களைப் பொன்னாக மாற்றவும் வல்லதெனக் கருதப்பட்ட நீர்மம். மருத்துவத்தில் நறுஞ்சுவையுள்ள இனிப்பான ஊக்கம் தரும் மருந்து. இதில் கணிசமான அளவு இனிப்பும் ஆல்கஹாலும் அடங்கியிருக்கும்.

elliptocytosis : (முட்டை வடிவ) சிவப்பணுக்கள் : இரத்தத்தில் சிவப்பணுக்கள் முட்டை வடிவில் அமைந்திருக்கும் ஒருவகை இரத்த சோகை நோய்.

Ellis plate : எல்லிஸ் தகடு : நீண்ட எலும்பு முறிவுகளில் உள்முகமாகப் பொருத்துவதற்கான தகடு பிரிட்டிஷ் எலும்பு அறுவை மருத்துவ அறிஞர் ஜே. எல்லிஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

Ellis's curve : எல்லிஸ் வளைவு : துரையீரல் உறைக் கசிவில் ஏற்படும் மந்தத்தின் அளவு. இது அக்குள் பகுதியில் மிக அதிகமாக இருக்கும். இப்பகுதியிலிருந்து இது முன்னும் பின்னும் சரிந்துகொண்டே போய் "S" வடிவை அடையும். இது அமெரிக்க மருத்துவ அறிஞர் கால்வின் எல்லிஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

elongation : நீட்சி.

Eltroxin : எல்டிராக்சின் : தைராக்சின் என்ற பொருளின் வணிக பெயர்.

emaciation : மெலிதல்; இளைத்தல்; தேய்வு இணைப்பு; பெரு நலிவு :உடல் அளவுக்கு அதிகமாக இளைத்து மெலிந்து போதல், இது உடல் திசுக்கள் நலிவுறுவதால் உண்டாகிறது.