பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

abilactation

41

abortion ratio


காலத்திற்கு முன்னரே அழிந்து படுதல் அல்லது சீர்கேடுறுதல்.

abilactation : பால்குடி மறக்கடிப்பு: தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தை மறக்கடித்தல்.

able-bodied : உடல் திடமுடைய.

ablution : நீராட்டல் மேனியலம்பல்; கழுவல்.

abnormal : இயல்பு கடந்த; இயல்பு மாறிய.

abnormality : இயல் கடந்தமை.

ABO blood groups : A, B, O இரத்தப் பிரிவுகள்: மனித இரத்தம் A, B, AB, O என நான்கு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரத்தச் சிவப்பு கணுக்களில் காணப்படும் புரதப் பொருளை அடிப்படையாகக் கொண்டது இப்பிரிவுகள்.

ablation: நீக்கல் அகற்றல்; உறுப்பு நீக்கம்: அறுவை சிகிச்சையில் துண்டித்தல் அல்லது அறுத்து எடுத்தல் மூலம் உறுப்பினை அகற்றுதல்.

abnormal displacement : இயல்பிலா இடமாற்றம்.

abnormalities : இயல்பு மாற்றம்.

abnormal sexual perversion : இயல்பிலா திரிபு பாலுணர்வு.

abocclusion : பல் தாடை ஒட்டாமை: மேல்தாடைப் பற்களும் கீழ்த்தாடைப் பற்களும் ஒட்டா நிலைமை.

abort : கருச்சிதைவு காய்விழு தல்; கருவெளியேறல்: உரிய காலத்திற்கு முன்பு கருவைச் சிதைவுறச் செய்தல்.

aborted: முதிராக்கரு வெளியேறல்.

abortifacient : கருச்சிதைவிப்பி; கருக்குலைப்பான்; சிதைவியம்; கருச்சிதைவுறுத்து மருந்து: உரிய காலத்திற்கு முன்பு கருப்பையி லிருந்து கருவை வெளியேற்றுவதற்குத் தூண்டுகிற அல்லது வினையூக்கம் செய்கிற ஒரு மருந்து.

abortion : கருச்சிதைவு, கருக்கலைப்பு: கருப்பையில் ஒரு வடிவம் பெறுவதற்கு முன்னரே அதனைக் கருப்பையிலிருந்து வெளியேற்றிவிடுதல். சூல் கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் கரு சிதைதல்.

abortion-criminal : குற்றம் சார்ந்த கருச்சிதைவு.

abortion-habitual : தொடர் கருச்சிதைவு.

abortion-incomplete : குறைக் கருச்சிதைவு.

abortion-invitable : தவிர்க்கவியலாக் கருச்சிதைவு; தவிரா கருச்சிதைவு

abortion-missed : தேக்கக் கருச்சிதைவு.

abortion ratio : கருச்சிதைவு விகிதம்.