பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

emotive

421

encephalocele


emotive : மனக்கிளர்ச்சி தூண்டல்.

empathy : பரிவுணர்வு : மற்றொருவரின் உணர்ச்சிகளில் முழு மையாக நுழைந்து கொள்வதற்கு உள்ள திறன், பிறருணர்வுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளுதல்.

emphysema : அதீத வீக்கம் : ஒர் உறுப்பின் அல்லது பகுதியின் இயல்பு கடந்த வீக்கம்.

emphysema : திசு விரிவாக்கம்; காற்றேற்ற விரிவு; காற்றூதல்; வளி வீக்கம்; வளிமை : வாயு விரிவடைதல் காரணமாகத் திசுக்கள் விரிவடைதல்.

empircism : அனுபவ மருத்துவம் : அனுபவ அறிவினால் செய்யப் படும் மருத்துவச் சிகிச்சை.

emplostrum : பிளாஸ்திரி.

empty calorie : வெற்றுக் கலோரி : உணவிலிருந்து பெறப்படும் சக்தியின் ஒர் அலகு. இது புரதமில்லாத கார்போஹைடி ரேட்டுகள், வைட்டமின்கள் அல்லது சீருணவை இழைமங்கள் வடிவில் இருக்கும். உப்புக்கண்ட உணவுகள் இதற்கு எடுத்துக்காட்டு.

empyema : குழிச் சீழ்க் கட்டு; சீழ்த்தேக்கம்; சீழ்மை : ஒர் உட் குழிவான உறுப்பினுள் அல்லது இடுக்கினுள் சீழ் சேர்ந்து கட்டி யிருத்தல்.

empyesis : சீழ்க்கட்டி : சீழ் வைத்திருக்கும் ஒருவகைத் தோல்கட்டி

emulsification : குழம்பாக்கம் : 1. குழம்பாக மாற்றும் செயல் முறை. 2. குடலிலுள்ள பெரிய உருண்டைத் துகள்களை ஒரே சீரான சிறிய துகள்களாக உடைத்தல்.

enamel : இனாமல் பொருள்; பற்சிப்பி; தந்தம் : பற்களைப் பள பளப்பாக்கும் மேற்பூச்சுப் பொருள்.

emarthrosis : பந்து கிண்ண மூட்டு.

enanthema : சளிச் சவ்வுப் பொக்குளம் : சளிச்சவ்வில் உண்டாகும் பொக்குளம்.

encelialgia : அடிவயிற்று வலி : அடிவயிற்று உள்ளுறுப்புகளில் ஏற்படும் வலி.

encephalic : மூளை சார்ந்த.

encephalitis : மூளை அழற்சி : மூளை வீக்க நோய்.

encephaIocoele : மண்டை யோட்டுப் பிளவு : மண்டையோட்டில் உள்ள சிறு இடைவெளி வழியே மூளையின் ஒரு பகுதி பிதுங்கி வெளிவருதல்.

encephalocele : மூளைப்பொருள் நீட்சி; மூளை இறக்கம்; மூளைப் பிதுக்கம் : மூளையிலுள்ள பொருள் மண்டையோட்டின் வழியே வெளியே நீட்டிக்