பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

endermic

423

endodermal sinus tumour


இடங்களிலும் மக்கள் சூழல்களிலும், குறிப்பிட்ட காலங்களில் தோன்றும் நோய் பற்றிய ஆய்வு.

endermic : தோல் மீது வினைபுரிதல்.

Ender's nail : எண்டர்ஸ் ஆணி : இடுப்பு உள் எலும்பு முறிவுகளை உள்முகமாக இணைப்பதற்கான ஆணி. ஆஸ்திரிய எலும்பியல் வல்லுநர் ஜே.எண்டர்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

endobronchitis : மூச்சுக்குழல் மேற்படல அழற்சி : மூச்சுக் குழலின் மேற்படல அணுக்கள் அழற்சியுறல்.

endocarditis : இதய உள்ளுறையழற்சி; குலையணைச் சவ்வு வீக்கம்; அக இதய அழற்சி : நெஞ்சுப்பையின் உள்வரி மென்தோல் வீக்கம்.

endocardium : இதய உள்ளுறை; குலையணைச் சவ்வு; அக விதயம் : நெஞ்சுப்பையின் உள்வரி மென்தோல்.

endocervical : கருப்பைக் கழுத்துப் பகுதி : கருப்பைக் கழுத்துப் பகுதியின் உட் பக்கத்தைக் குறிப்பது.

endocervicitis : கருப்பைக் கழுத்து வீக்கம்; கருப்பை உட்பரப்பு அழற்சி; கருப்பை அக வழற்சி : கருப்பைக் கழுத்துப் பகுதியின் உள்வரிச் சவ்வின் வீக்கம்.

endocervix : கருப்பைக் கழுத்துப்பைச் சீதப்படலம் : கருப்பைக் கழுத்துப் பகுதியில் காணப்படும் புறச்சீதப் படலம்.

endocrane : தலை ஒட்டின் உட்பரப்பு.

endocranium : மண்டையோட்டு உள்சவ்வு : மண்டையோட்டின் உட்பரப்புப் பூச்சுச் சவ்வு. மூளையையும் முதுகுத் தண்டையும் சூழ்ந்து கொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு.

endocrine : நாளமில் சுரப்பு நீர்; உட்சுரப்பு : செல் நரம்பிழையின்றி நேரே குருதியினுள் கசிகிற சுரப்பு நீர்.

endocrinology : நாளமில் சுரப்பியல்; உட்சுரப்பியல் : நாளமில் சுரப்பிகளையும், அவற்றின் உள்ளார்ந்த சுரப்பு நீர்களையும் பற்றி ஆராயும் இயல்.

endocyst : நீர்க்கட்டிப் படலம் : நாடாப்புழு நீர்க்கட்டியின் உட்பக்கச் சுவரில் காணப்படும் வளர்படலம்.

endoderm : கருவுறை உள்வரிச் சவ்வு அடித்தோல் படலம்; அகச் சருமியம் : கருவுயிர் உறையின் உள்வரிச் சவ்வு.

endodermal sinus tumour : கருவகக் கட்டி : பெண் குழந்தை களிடமும், குமரப் பருவத்தினரிடமும் ஏற்படும் கருவகக் கட்டி