பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

entropion

430

enzyme test


entropion : கண்ணிமை பிறழ்ச்சி; இமை உட்பிறழ்ச்சி; இமை உள் நோக்கல்; உட்சுருட்டு இமை உட்பிதுக்கம் : கண் இமை மயிர், கண்விழி உருளையில் படும் வகையில் கண்ணிமை தலை கீழாகத் திரும்பியிருத்தல்.

entoptic : உள்கண் சார்ந்த : கண்ணின் உட்பகுதி சார்ந்த.

entozoon : விலங்கு ஒட்டுணி : ஒட்டுணரிகளுக்கு ஆதாரமான உயிரிகளுக்கும் வாழும் ஒரு விலங்கு ஒட்டுணரி.

enucleate : கண்விழி அகற்றுதல் : கண்விழியை அதைச் சூழ்ந்து உள்ள பொதியுறையிலிருந்து அறுவைச் சிகிச்சை மூலம் முற்றிலுமாக அகற்றுதல்.

enucleation : உறுப்பு நீக்கம்; தோண்டி நீக்கல்; உரித்தல் : உடல் உறுப்பினை அல்லது கட்டியினை முழுவதுமாக அகற்றுதல் (எ-டு) விழிப்பள்ளத்திலிருந்து கண் விழியைப் பிரித்தெடுத்தல்.

enuresis : சிறுநீர்க் கசிவு; சிறுநீர்க் கட்டுப்பாடின்மை; உறக்க நீரிழிவு; நீர்க்கழிவு : சிறுநீரை அடக்க முடியாதிருத்தல்; படுக்கையில் சிறுநீர் கழிதல்.

Envacar : என்வாக்கார் : குவானாக்சான் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

envenomation : நஞ்சேற்றம் : கடித்தல் அல்லது கொட்டுதல் மூலம் கடும் நச்சுப் பொருள்களை உட்செலுத்துதல்,

environmental hygiene : சுற்றுப்புறச் சுகாதாரம்.

environmental pollution : சூழல் கேடு.

environment : சுற்றுச்சூழல் : உயிர் வாழ்க்கையை அல்லது வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய சுற்றுச் சூழல் நிலைமைகள்.

enzyme : செரிமானப் பொருள்; நொதிப்பி; உயிர்வினையூக்கி; நொதியம்; நொதி : உயிருள்ள உயிரணுக்கள் உற்பத்தி செய்யும் கரையக்கூடிய புரதப் பொருள். இது தான் அழியாமலும், மாறுதலடையாமலும் ஒருவினை யூக்கியாகச் செயற்படுகிறது.

enzyme linked immunosor bentassay : செரிமானப் பொருள் தொடர்புடைய நோய்த் தடைக் காப்பு ஈர்ப்புச் சோதனை (எலிசா) : உடலில் 'எய்ட்ஸ்' எனப்படும் ஏமக்குறைவு நோய்க்கு எதிரான பொருள்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான ஊனிர்ச் (இரத்த) சோதனை. இச்சோதனை மூலம், "மனித நோய்த்தடைக்காப்புக் குறை பாட்டு நோய்க்கிருமிகளுக்கு (எச்ஐவி)" எதிராக உடல்வினை புரிந்திருக்கிறதா என்பதைக் காட்டுகிறது.

enzyme test : நொதிச் சோதனை.