பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

epiglottitis

433

epileptic


குரல் வளை மூடி வாயிலை அடைத்துக் கொள்கிறது.

epiglottitis : குரல்வளை மூடி வீக்கம்; குரல்வளை மூடி அழற்சி.

epilation : மூடிநீக்கம்; இமைமயிர் நீக்கம்; மயிர்நீக்கம் : முடியின் வேர்களை மின்பகுப்பு மூலம் அகற்றுதல் அல்லது நீக்குதல்.

epilepsy : காக்காய் வலிப்பு; வலிப்பு நோய்; இசிவு நோய் : மூளை ஒரு கணிப்பொறி போன்றது. கணிப்பொறி போலவே, மூளை அணுக்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டள்ளன. மின்னணு வேகத்தில் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பு கொள்கின்றன. சில வேளைகளில் மூளையில் வழக்கத்திற்கு மாறாக அதிர்ச்சி ஏற்படுகின்றன. இதனை 'வலிப்பு' என்கிறோம், மூளையிலிருந்து கட்டுக்கடங்காமல் மின்காந்த ஆற்றல் வெளிப்படும் போது இந்த வலிப்பு உண்டாகிறது. மூளை விரைவிலேயே இயல்புநிலைக்கு வந்துவிடுவதால் வலிப்பு நோயாளிகள் இயல்பாக எந்த நோய்க் குறிகளும் தென்படுவதில்லை. வலிப்பு நோயில் பலவகைகள் உண்டு சாப்பிடும்போது வலிப்பு வந்தால் அது 'சாப்பாட்டு வலிப்பு (Eating epilepsy) எனப்படும்; சிரிக்கும்போது ஏற்படும் வலிப்பு (Laughing epilepsy) ஆகும்; சிலர் வெந்நீரைத் தொட்டால் வலிப்பு வரும் அது "வெந்நீர் வலிப்பு".

இந்நோயாளிகள் ஊர்திகள் ஒட்டுவதையும், ஆறு, குளங்களில் குளிப்பதையும், வன்முறைக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களையும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளையும் பார்ப்பதையும், கூரியமுனைகளை உடைய பொருள்களைக் கையாள்வதைத் தவிர்ப்பது நல்லது. நன்கு உறங்குதல், சமச்சீருணவு உண்ணுதல், குறிப்பிட்ட மருத்துவக் கவனிப்பு, சிறந்த பொழுது போக்கு ஆகியவை மிகுந்த நலன் பயக்கும்.

epileptic : காக்காய் வலிப்பு நோயாளி; வலிப்பு நோயாளி : காக்காய் வலிப்பு நோயுடையவர்.