பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

epileptiform

434

epitarsus


epileptiform : போலி காக்காய் வலிப்பு : காக்காய் வலிப்பு அல்லது அதன் அறிகுறிகளை ஒத்திருக்கிறது.

Epilim : எப்பிலிம் : சோடியம் வால்புரோயேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

epimenorrhoea : மாதவிடாய்; நீட்சிக் குறைவு; குறுகிய மாதவிடாய்; சீரற்ற மாதவிலக்கு : மாதவிடாய்ச் சுழற்சியின் நீட்சி குறைதல்.

epinephrine : எப்பினெஃப்ரின் : அண்ணீரகச் சுரப்பிகளில் உற் பத்தியாகும் அண்ணீரகச் சுரப்பு நீர். இது உடலின் உழைப்பினை ஈடுசெய்வதற்கு இதயத் துடிப்பு, இரத்தம் பாய்தல், மூச்சு விடுதல் ஆகியவற்றை அதிகரிக்கிறது.

epiphenomenon : நோய்க்கால விபத்து : ஏதேனும் நோயின் போது ஏற்படும் விபத்து நிகழ்வு.

epiphora : கண்ணிர் வடியும் நோய் : நோய் காரணமாகக் கன்னத்தில் அளவுக்கு மீறி வடிதல்.

epiphoron : எச்ச உறுப்புமைவு : கரு அண்டம் சிறுநீரகம் தொடர் புடைய ஒர் எச்ச உறுப்பு அமைவு.

epiphysis : எலும்பு முனை; நீர் எலும்புக் குருத்து வளர்முனை : வளர்ந்து வரும் ஒர் எலும்பின் முனை.

epiphysitis : எலும்பு முனை நீக்கம்; நீள் எலும்பு குருத்து முனை அழற்சி.

epiploon : வகை மடிப்பு பெருக்கம் : குடல் போன்ற பிற வயிற்று உறுப்புகளோடு இரைப்பையை இணைக்கும் வகை மடிப்பு பெரிதாக அமைந்து இருத்தல்.

episclera : கண் இணைப்புத் திசு; விழிவெளிப்படல மேலுறை : கண்வெளிக் கோளத்தின் புறத்தோலுக்கும், இமை இணைப் படலத்திற்குமிடையிலான தளர்வான இணைப்புத் திசு.

episcleritis : கண் இணைப்புத் திசு வீக்கம்; விழி வெளிப்படல மேலுறை அழற்சி.

episiotomy : கருவாய்க் கீறல் : குழந்தை பிறப்பதற்காகப் பெண்ணின் கருவாயில் அறுவைச் சிகிச்சை மூலம் கீறல் உண்டாக்குதல்.

epispastic : கொப்புளப் பொருள்; கொப்புளம் ஊக்கி; கொப்பு மூட்டி : கொப்புளம் உண்டாக்கும் பொருள்.

epistaxis : மூக்கில் குருதிக் கசிவு; மூக்கில் குருதி ஒழுக்கு; நாசிக் கசிவு : மூக்கிலிருந்து இரத்தம் கசிதல்.

epitarsus : இணைப்படல மடிப்பு : மகப்பேற்றுக் குழாயிலிருந்து மூடி அருகில் வரையில் செல்லும் இணைப்படல மடிப்பு.