பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

epithalamus

435

Erb's area


epithalamus : மூளை முடிச்சுப் பகுதி : மூளை நரம்பு முடிச் சுக்குமேலேயும், பின்புறத்திலும் உள்ள பகுதி.

epithelialization : தோலிழைமப் படலமாதல்; புறத்தோலிய மூட்டம்: காயம்பட்ட பகுதியில் மேல் தோலிழைமப் படலம் படருதல். இது காயம் குணமடைவதன் இறுதிக் கட்டம்.

Epithelium : மேல் தோலிழைம்; புறத் தோலியம்; மேல் திசு : சளிச்சவ்வின் மேல்தோல் இழைமம்.

Eppy : எப்பி : சுவை முனைப்பற்ற இயக்குநீர் கண்சொட்டு மருந்தின் வணிகப் பெயர்.

Episikapron : எபிசிக்காப்ரான் : எப்சிலோன் அமினோ காப்ராய்க் அமிலத்தின் வாணிகப் பெயர். இது இரத்தக் கசிவை தடுக்கிறது.

epsom salts : எப்சம் உப்பு : மக்னீசியம் சல்ஃபேட் பேதி மருந்து வகை.

epulis : ஈற்றுக்கட்டி; செதில்கட்டி : பல் ஈறுகளில் உண்டாகும் கட்டி.

Equamil : ஈக்குவானில் : மெப்ரோபேமேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

equilibrium constant : சமநிலை மாறிலி : ஒரு வேதியில் வினை யூக்கிகள், உற்பத்திப் பொருள்களின் செறிவு நிலைகளைக் குறிக்கிற ஒரு மதிப்புரு. இது "K" என்ற மதிப்பில் குறிப்பிடப்படுகிறது.

eradication : தொற்றுப்பரவல் ஒழிப்பு : தொற்றுவினையூக்கியைக் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மூலம் ஒழிப்பின் வாயிலாகத் தொற்றுநோய் பரவுவதை ஒழித்தல்.

Erb's area : எர்ப் மண்டலம் : மார்பெலும்புப் பக்கக் கிளையாகவுள்ள மூன்றாவது இடது இடைவெளி பொதுவாக இரண்டாவது பெருந்தமனி மண்டலம் என அழைக்கப்படுகிறது. ஜெர்மன் மருத்துவ அறிஞர் வில்ஹெல்ம் எர்ப் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் பெருந்தமனியின் விரிகுருதி அழுத்த முணு முணுப்பு நன்கு கேட்கிறது.