பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ethmoditis

440

ethyloestrenol


களையுடைய, வாய்வரி உட்கொள்ளத்தக்க ஒரு தீவிரக் கூட்டுப்பொருள். ஒரு வேளை மருந்து ஊசியால் செலுத்தப்படும் போது அதே அளவு புரோஜஸ்டிரானை விட ஆறு மடங்கு ஆற்றல் வாய்ந்தது.

ethmoditis : சல்லடை எலும்பு உட்புழை வீக்கம் : சல்லடை எலும்பு உட்புழைகள் வீக்க மடைதல.

ethmoid : சல்லடை எலும்பு : முகர்தல் நரம்புகள் செல்வதற்குரிய பல துளைகளையுடைய சதுர வடிவான முக்கடி எலும்பு.

ethmoidectomy : மூக்கடி எலும்பு அறுவைச் சிகிச்சை : மூக்கடி எலும்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

ethology : மனிதப்பண்பு ஆய்வியல் : மனிதரின் நடத்தைமுறை களை உயிரியல் முறையில் ஆய்வு செய்தல்.

ethnic : இனத்துக்குரிய : மனித இனப்பிரிவுகள் அல்லது பண் பாட்டுப் புரிவுகள் சார்ந்த, மனித இன ஆராய்ச்சிக்குரிய.

ethnology : மனித இன ஆய்வியல் : மனித இன்வகை வேறு பாடுகளையும், தொடர்புகளையும் ஆராயும் அறிவியல். பிறப்பு, கருறுதல், கருக்கலைப்பு, திருமணம், உணவுமுறை, சுகாதாரக் கவனிப்பு, மரணம் போன்ற வாழ்க்கை நிகழ்ச்சிகள் தொடர்பான மனப்போக்குகள், நெறி முறைகள், நம்பிக்கைகள் குறித்து இதில் ஆராயப்படுகிறது.

ethopropozine : எத்தோப்ரோப்பாசின் : தசைச் சுரிப்புக் கோளா றுகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து.

ethosuximide : எத்தோசக்சிமைட் : இலேசான காக்காய் வலிப்பு நோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படும் மருந்து.

ethotoin : எத்தோட்டாயின் : கடுமையான காக்காய் வலிப்பு நோய்க்கு எதிரான மருந்து.

Ethrane : எத்ரான் : என்ஃபுளுரான் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ethylbiscoumacetate : எத்தில் பிஸ்கோமாசிட்டேட் : குருதி உறைவதற்கு எதிராகப் பயன் படுத்தப்படும் மருந்து.

ethylcarbamate : எத்தில்கார்பாமேட் : சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் ஒரு கூட்டுப் பொருள்.

'ethylchloride : எத்தில் குளோரைடு :. சிறிய அறுவைச் சிகிச்சைகளின் போது பயன்படுத்தப்படும். விரைந்து ஆவியாகக் கூடிய மயக்க மருந்துப் பொருள்.

ethyloestrenol : எத்தில் எஸ்டிரனால் : கடும் எடையிழப்பு நோயைக் குணமாக்க உடலில் புரத உற்பத்தியை ஊக்குவிக்கும் ஊட்டப்பொருள்.