பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

euthanasia

eventration


euthanasia : நோவில்லாச் சவ்வு; வலியின்றிக் கொல்லல்; கருணைக் கொலை; நற்சாவு : குணப்படுத்த முடியாத துன்பம் நிறைந்த நோயிலிருந்து செயற்கை முறையில் மரணத்தை வருவிக்கும் முறை.

euthenics : மரபணு இணக்கச் சூழல் : மரபணுக்கள் எளிதாகத் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கு இயல்வியக்கத் தக்க சூழ்நிலையை அணுகுதல்.

euthymic mood : இயல்பு மனநிலை : சோர்வான அல்லது அதீதமான மனநிலை இல்லாதிருக்கிற இயல்பான மனநிலை.

euthyroid state : கேடயச் சுரப்பி இயல்பு நிலை; நல் தையிராய்டு : கேடயச் சுரப்பியின் (தைராய்டு) இயல்பான இயக்கத்தைக் குறிக்கும் நிலை. சமநிலை இயக்கம்.

eutocia : இயல்பு மகப்பேறு; இயல்பாக ஈனல்; நற்பேறு : சிக்கல்கள் எதுவுமின்றி இயல்பாக வயிற்று வலி வந்து குழந்தைப் பிறத்தல்,

Eutonyl : யூட்டோனில் : மானோமைன் ஆக்சிடேஸ் என்ற தடை யுறுத்து மருந்தின் வாணிகப் பெயர்.

evacuant : பேதி மருந்து; பேதி ஊக்கி; வெளியேற்றி : வயிற்றைச் சுத்தம் செய்யப் பேதியாகும் படி செய்கிற மருந்து.

evacuation : பெருங்குடல் தூய்மையாக்கல்; மலம் அகற்றல்; வெளியேற்றம் : பெருங்குடலிலுள்ள மலப் பொருள்களை வெளியேற்றுதல்.

evacuator : வெளியேற்று கருவி; நீக்கி : சவ்வுப்பையிலிருந்து ஒரு கல்லை அப்புறப்படுத்துவதற்கான கருவி-வெளிப்போக்கி.

Evans' blue : ஈவான்ஸ் சாயம் : நீரில் கரையக்கூடிய ஒரு டயாசிச் சாயம். இது நோயைக் கண்டுபிடிப்பதற்கு நரம்பு மூலம் செலுத்தப்படுகிறது. அமெரிக்க உடல் உட்கூற்று அறிஞர் .ஹெர்பெர்ட் ஈவான்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

evaporate : ஆவியாக்கு : திரவ நிலையிலிருந்து சூடாக்குவதன் மூலம் ஆவியாக (வாயுநிலை) மாற்றுதல்.

evaporation : ஆவியாதல் : திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறுதல்.

evaporting lotion : ஆவியாக்கும் நீர்மம் : ஆவியாகித் தோலைக் குளிர்விப்பதற்காக வெப்பத்தை உறிஞ்சிக் கொள்ளக்கூடிய ஒரு வகை நீர்மம்.

eventration : குடல் முன் பிதுக்கம் : அடிவயிற்றிலிருந்து குடல் முன்புறம் துருத்திக் கொண்டிருக்கும்.