பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

eversion

444

excipient


eversion : கண்ணிமை பிறழ்வு; வெளிப் புரளல்; புறத்திருப்பம்; வெளித் திருப்பல் : மேல் கண்ணிமை வெளிப்புறமாகத் திரும்பியிருத்தல்,

evisceration : உள்ளுறுப்பகற்றல் : குடல் போன்ற உள்ளுறுப்புகளை அகற்றுதல்.

evertor : தசைத்திரிபு : ஒர் உறுப்பினை வெளிப்புறமாகத் திருப்பி விடும் ஒரு தசை நோய்.

evoked response : தூண்டிய துலங்கல் சோதனை : ஒரு குறிப்பிட்ட புறத்துண்டுதலுக்கு மூளை அல்லது தண்டுவடத்தின் மின்விசை இயக்கம் எந்த அளவு செயல்படுகிறது என்பதை அளவிடும் ஒரு சோதனை. இது ஒரு வரைபடப் படியாகப் பதிவு செய்யப்படுகிறது.

evolution : பரிணாமம் / உருமலர்ச்சி : வளர்ச்சி நடைபெறும் செயல்முறை. ஒரு மக்கள் குழுமத்தின் மரபணுக் கட்டமைப்பில் ஏற்படும் காலமுறை தொடர்புடைய மாற்றம்.

evuision : கிழித்தெடுத்தல்; இழுத்தகற்றல்; பிடுங்கல் : ஒரு கட்டமைப்புப் பொருளை வலுக்கட்டாயமாகக் கிழித்து எடுத்தல்.

Ewing's tumour : எலும்பு மச்சைக் கட்டி : ஒரு குழந்தையின் ஒரு நீண்ட எலும்பின் மச்சையில் ஏற்படும் கட்டி. இவிங் விளக்கியது.

examination : உடல் ஆய்வு : உடலைப் பொதுவாகவும், திட்டமிட்ட முறையிலும், உள்ளமைப்பு சார்ந்தும் ஆய்வு செய்தல், இதில் ஆய்வு, கைச்சோதனை, தட்டுச் சோதனை, அசைவு-இயக்கத்துடிப்புச் சோதனை ஆகியவை அடங்கும்.

exacerbation : நோவுப் பெருக்கம்; நோய்ப் பண்வு மிகைத்தல்; அதிகரித்தல்; மிகைவு : நோய் அறிகுறிகளின் கடுமை அதிகமாதல்.

exanthema : பொக்குளம்.

exchange transfusion : பரிமாற்ற இரத்த ஊட்டம் : பச்சிளங் குழவியிடம் தடைக் காப்பு நச்சுப் பொருள்களைக் குறைப்பதற்கான நோய்ச்சிகிச்சை முறை. இதில் இரத்ததானமாக அளிக்கப்பட்ட இரத்தம், குழந்தையின் பெரும் பகுதியான ஒட்டக்குருதிப் பதிவாக உட் செலுத்தப்படுகிறது. இந்த பரிமாற்ற இரத்த ஊட்டம், பிறந்த குழந்தையின் குருதிச் சோகை நோயைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

excipient : ஊடகம் : பொருத்தமான நிலைப்பாட்டினை உண்டாக்கப் பயன்படும் ஒரு வேதியியல் விளைவுகளற்ற பொருள்.