பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

excision

445

exercise


excision : துண்டிப்பு; அறுத்தெடுத்தல்; அரிதல் : ஒர் உறுப்பை வெட்டித் துண்டித்து எடுத்தல்.

excitability : தூண்டும் திறன்; கிளர்ச்சித்தல்; தூண்டல் தகைமை : எளிதில் சினங்கொள்ளும் நிலை; எளிதில் உணர்ச்சியைக் கிளறி விடும் நிலை.

excitation : கிளர்ச்சியுறச் செய்தல்; தூண்டல் கிளர்வு : ஒர் உறுப்பினை அல்லது திசுவைக் கிளர்ச்சியுறச் செய்யும் முறை.

excited : தூண்டல் : புறத் தூண்டுதலின் பாதிப்புக்குள்ளாகாத கிளர்ச்சியுற்ற, பயனற்ற, இயக்க நடவடிக்கை.

exclamation mark hairs : வியப்புக் குறி முடி : குறுகலான, ஒழுங்கின்றிக் கனமான, முனையில் தட்டையான முடிகள். இதில் நுனிநோக்கிச் சிறுத்துச் செல்கிற, இணைப்பு மையம் நோக்கி அமைந்துள்ள முனைகள் இருக்கும். தலை வழுக்கையின்போது இது உண்டாகும்.

exclusion (isolation) : தொற்றுத் தடைக்காப்பு; எற்காமை : நோய் தொற்றுவதிலிருந்து பாதுகாப்பதற்காக நோயாளியைத் தனியாகப் பிரித்துவைத்தல். நோயாளிக்கு நோய்த்தொற்றுத் தடைக்காப்பு குறைவாக இருக்கும்போது இது தேவைப்படுகிறது.

excoriation : தோல் உரித்தல்; தோல் பொரிதல் : தோல் உரிக்கப்படும் நிலை.

excrement : கழிவுப் பொருள் : உடலில் வெளிப்படும் கழிவுப் பொருள். முக்கியமாக மலம்.

excrescence : வீண்தசைத் திரட்சி : மிகையுறுப்பு; காய்; கழலை.

excreta : கழிவுப் பொருள்கள்; கழிவு : மலஜலம் போன்ற இயல்பான கழிவுப்பொருள்கள்.

excretion : மலங்கழித்தல்; கழிப்பு வெளியேற்றம் : மலம், கழிவுப் பொருள்.

excretory system : கழிவு மண்டலம்.

excretory : மலக்கழிப்பு இழை நாளம் : மலத்தைக் கழித்து வெளியேற்ற உதவும் இழை நாளம.

excuent : வெளிபாய்கிற : குருதி நெஞ்சுப்பையிலிருந்து புறஞ் செல்கிற.

exenteration : உள்ளுறுப்பு அகற்றுதல்; குடல் அகற்றல் : உட்கிடப்புறுப்புகளை அவற்றின் குழிவிலிருந்து பிடுங்கியெடுத்து அகற்றுதல்.

exercise : உடற்பயிற்சி : இயல்பான திறம்பாட்டினைப் பராமரிப்பதற்கு அல்லது மீட்பதற்கு அல்லது அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் உடல் அல்லது மூளை நடவடிக்கை