பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



F

fabella : கெண்டைக்கால் எலும்பு வளர்ச்சி : கெண்டைக்கால் தசையின் பக்கம் நோக்கிய முனையில் நார்த்திசு வளர்ச்சி அல்லது எலும்பு வளர்ச்சி.

Fabry's disease: ஃபேப்ரி நோய் : லைசோசோமால் அல்ஃபா கேலக்டோசிடேஸ் குறைபாடு காரணமாக தலைமுறை கடந்த பண்பு தொடர்பாகப் பாரம் பரியமாக வரும் ஒரு மரபணுக் கோளாறு. இதன் காரணமாக, சிறுநீரகங்களிலும் பிற உறுப்புகளிலும் கிளைக்கோலிப்பிட் திரள்கிறது. இதனால், அவற்றின் செயற்பாடு பாதிக்கப்படுகிறது. ஜெர்மன் மருத்துவ அறிஞர் ஃபேப்ரி பெயரால் அழைக்கப்படுகிறது.

felerifuge : காய்ச்சல் தணிக்கும் மருந்து.

face : முகம் : நெற்றி முதல் முக வாய்க்கட்டை வரையிலுள்ள தலையின் முன்பகுதி. இதில் நெற்றி, கண்கள், மூக்கு, வாய், கன்னங்கள், தாடை ஆகியவை அடங்கும்.

face-ache : முகவலி; முகநரம்பு வலி.

face-bow : முக வளைவு : தாடை எலும்புக்கும் கன்னப் பொட் டெலும்புகளுக்குமிடையிலான தொடர்பினை அளவிடுவதற்கான ஒரு சாதனம். இது பல் வார்ப்புருக்களைத் தயாரிக்க தேவைப்படுகிறது.

facet : முகப்பு; கூறு : இணைப்பதற்குரிய ஒர் எலும்பின் சிறிய வழவழப்பான மேற்பரப்பு.

facial : முகத்தசை பிடித்துவிடல்; முகத்தின்; முக.

facial angle : முக்கோண அளவு : காது, மூக்கு, நெற்றிவரைகளி டையேயுள்ள கோண அளவு.

facial nerve : முக நரம்பு.

facial paralysis : முக வாதம்.

facies : முகத்தோற்றம் : 1. முகத்தின் மெய்ப்பாடு அல்லது தோற்றம். 2. ஏதேனும் கட்டமைப்பின் மேற்பரப்பு அல்லது முகப்பு.

facilitation : உறுதுணைபுரிதல் : ஒரு நடவடிக்கையை அல்லது செய்முறையை வலுப்படுத்துதல்.

facility : முகம்-கழுத்து சார்ந்த : முகம், கழுத்து தொடர்புடைய.