பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

failure.circulatory

453

family


failure.circulatory : சுழற்சி நிறுத்தம்.

failure,heart : இதய அடைப்பு; மாரடைப்பு.

failure,hepatic : ஈரவழிவு.

failure,peripheral circulatory : புறவோட்ட நிறுத்தம்.

failure,renal : நீரக அழிவு.

failure to thrive : உடல் கரைவு : உடல் மெலியும் நோய். இது குழந்தைகளை மிகுதியாகப் பீடிக்கிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது ஊட்டச்சத்தினை ஈர்த்துக் கொள்ள இயலாதிருத்தல் காரணமாக இது உண்டாகிறது.

faint: மயக்கம் : 1. உடல் பலவீனமடைவதாகவும் உணர்விழக்கப் படுவதாகவும் உணர்தல். 2. குருதியழுத்தக் குறையால் ஏற்படும் உணர்விழப்பு குருதி மயக்கம். 3. மூளைக் குருதியோட்டக் குறை காரணமாக உண்டாகும் உணர்விழப்பு.

false : போலியான.

Failopian canal : கருவழிக் குழாய்; ஃபாலோப்பியன் குழாய் : மனிதக் கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாய். இத்தாலிய உடற்கூறியல் அறிஞர் பாலோ பியஸ் பெயரால் அழைக்கப் படுகிறது.

Fallopian ligament : ஃபாலோப்பியன் தசை நார்ச் சவ்வு : கருப் பையின் வட்ட வடிவ தசை நார்ச் சவ்வு.

fallopian tubes : கரு வெளியேறும் குழாய் : மனிதக் கருப்பையிலிருந்து கரு வெளியேறும் குழாய்.

fallotomy : ஃபாலோப்பியக் குழாய் அறுவை : ஃபாலோப்பிய குழாய்களைப் பகுத்தல்.

familial : குடும்ப நோய்; குடும்ப வழிநோய்; குடும்ப : ஒரே குடும் பத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்களைப் பீடிக்கும் ஒரு நோய்.

family : குடும்பம் : 1. ஒரு பொது மூதாதையரின் வழி வந்த தனி மனிதர்களின் குழுமம், 2. நேசத் தொடர்புடைய இனத்தொகுதி. 3. குடும்பங்கள் ஒருங்கிணைந்து வாழ்ந்து, பொதுப்பண்புகளைப்