பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fascia

455

fatty heart


கறைந்துவிடுகிறது. இதன் காரணமாக, தூரத்திலுள்ள பொருள்களை மட்டுமே ஒருவர் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அருகிலுள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை.

fascia : தசைப்பட்டை; திசுப்படலம்; திசுத்தகடு; படலம் : தசை நார்களை சூழ்ந்துள்ள தசைப்பட்டை.

fasciculation : இமைத் துடிப்பு; தசைத் துடிப்பு : மேல்-கீழ் கண்ணிமைகளில் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஏற்படும் தசைத் துடிப்பு.

fasciculus : தசைக்கட்டு (நரம்புக் கட்டு); நரம்புத்திரள்; நுண்கற்றை; கற்றை : தசையின் அல்லது நரம்புகளின் ஒரு சிறிய திரட்சி.

fascioplasty : திகத்தகட்டு ஒட்டறுவை : தசைநார்களைச் சூழ்ந்துள்ள திகத்தகட்டில் ஒட்டறுவை மருத்துவம் செய்தல்.

fasciitis : இணைப்புத் திசு அழற்சி; திசுப் படல அழற்சி : இணைப்புத் திசுவில் உண்டாகும் வீக்கம். இது நோய்த் தொற்று, காயம் அல்லது ஒரு தானியக்க ஏம மறுவினை காரணமாக உண்டாகிறது.

fasciotomy : தசைப்பட்டை அறுவை; திகப்படலக் கீறல்; தாள் வெட்டு : தசை நார்களைச்சூழ்ந்துள்ள தசைப்பட்டையை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்து எடுத்தல்.

fast : உண்ணாமை, நோன்பு.

fastigium : உச்சநிலைக் காய்ச்சல்; நோய் உச்சத் தாக்கல் : ஒரு காய்ச்சலின் உச்ச கட்டம். இது நோய் முழு வளர்ச்சி பெற்றிருப்பதைக் குறிக்கும்.

fat : கொழுப்பு நிணம்) : உடலிலுள்ள நெய்ப்பசையுள்ள பொருள். A,D,E,K ஆகிய வைட்டமின்கள் கொழுப்பில் கரையக்கூடியவை. உடலுக்கு சக்தியைக் கொடுக்கிறது.

fatigue : சோர்வு; தளர்வு; களைப்பு : அயர்ச்சி, தூண்டுதலுக்குச் செயலாற்றும் திறன் குறைந்து தசை சோர்வடைதல்.

fatty : கொழுப்பேற்றம் : நோய் காரணமாக உடல் பெருத்திருத்தல்

fatty degeneration : நோய்க் கொழுப்புப் படிவு : உடலில் நோய்த் தன்மையுள்ள கொழுப்புப் படிதல். இதனால் திசுக்கள் நலிவுறுகின்றன. குறிப்பாக, ஈரற்குலை, சிறுநீரகம், இதய நோய்களின்போது இது ஏற்படுகிறது.

fatty heart : இதயக் கொழுப்பு நோய்; கொழுப்பேற்ற இதயம் : நெஞ்சுப்பைக் கொழுப்புக் கோளாறு.