பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

flight of ideas

467

flow


flight of ideas : தொடர்பற்ற எண்ணங்கள்: பகுத்தறிவுக்குப் பொருந்தாமல், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அடுத்துடுத்துச் சிந்தனைகள் ஏற்படுதல். பித்து நிலைக் கோளாறுகளில் ஒன்று.

float : மிதவை; மிதக்கவிடு.

floaters : மிதவைத் தோற்றப் பொருள்கள் : கண்விழிக் குழியிலுள்ள பளிங்கு போன்ற திண் நீர்மத்தில் மிதக்கும் பொருள்கள். இவை ஆளின் கண்களுக்குப் புலனாகும்.

floating kidney : நிலைபெயர் சிறுநீரகம்; மிதக்கும் சிறுநீரகம் : சிறு நீரகம் இயல்புக்கு மீறிய நிலை பெயரும் கோளாறு.

floccillation : சன்னிப் பிறாண்டல் : நோயாளி சன்னி வேகத்தில் படுக்கைத் துணிகளைப் பிறாண்டுதல்.

floating ribs : நிலைபெயர்வு விலா எலும்புகள் : நெஞ்சு எலும்பு டனோ மற்ற விலா எலும்புகளுடனோ இணையாமலிருக்கிற 1ஆவது 12ஆவது விலா எலும்புகள்.

flocculation : துகள் திரள் படலம் : கரைந்த நிலையிலும் சவ்வூடு செல்லுமளவு ஒன்றுபட்டுக் கலவாத துகள்களின் சிறு கலவைத் தொகுதி. இது வெறுங் கண்களுக்கு படலம் போல் தோற்றமளிக்கும்.

fooding : குருதிப்பெருக்கு; கருப்பை குருதி மிகை : கருப்பையி லிருந்து அளவுக்கு மீறி இரத்தம் பெருக்கெடுத்தல்; பெருவொழுக்கு

floppy infant : நுடங்கல் குழந்தை : தள்ளாடி நடக்கும் அல்லது கை கால் பகுதிகளின் தூண்டுதலுக்குக் குறைவான துலங்கல் உடைய, நலிந்த தசை இயக்கமுடைய குழந்தை இது பல்வேறு நரம்புத் தசை மற்றும் தசை எலும்புக் கோளாறுகளினால் உண்டாகிறது.

fora : நுண்ணுயிர்ப் படையெடுப்பு : உடலின் பல்வேறு உறுப்புகளில் நுண்ணுயிரிகள் குடியேறுதல்.

flora, bacterial : நுண்ணுயிரின வகை.

flora, intestinal : குடலின் வகை.

florid : பகட்டொளி வண்ணம்; செக்கச்சிவந்த; மிகையான : பகட்டான ஒளி வீசும் வண்ணம்.

founce : வெட்டியிழுப்பு; குலுக்கம்; உடல் குதிப்பு; உறுப்பு துடிப்பு : உடலின் துடிப்பாட்டம், உடலின் குதியாட்டம், தடுமாறுதல், தள்ளாடுதல்.

flow : ஒழுக்கு; போக்கு; ஒட்டம் : 1. ஒழுகும் இயல்பு 2. காலத்தை பொறுத்து காலம் நகர்தல்.